(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் 2012ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் எஸ்.எல்.மன்ஸூர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஏ.எம்.இஷாக் கலந்து கொண்டார்.
இதன்போது நாடளாவிய ரீதியில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மாணவர்கள் சித்தியடைய கடுமையாக உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது கல்வி முன்னேற்ற மன்றத்தின் 2012ம் ஆண்டுக்கான புலமைத்தாரகை சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஏ.எம்.இஷாக் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி முன்னேற்ற மன்றத்தின் தலைவர் எஸ்.எல்.மன்ஸூர், செயலாளர் எம்.யு.எம்.முன்ஸிர் மற்றும் நீதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம் பளீல் உட்பட பெருந்திரளான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.