அம்பாறையில் நடைபெற்று வருகின்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கில் 27ம் திகதி புதன், 28ம் திகதி வியாழன் ஆகிய இரு தினங்களில் முதலாம் தவணைப் பரீட்சை நடைபெற மாட்டாது என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்தார்.
மேற்படி இரு தினங்களில் நடைபெறவிருந்த பாடங்கள் அடுதத்த வாரம் இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கண்காட்சியை மாணவர்கள் ஆசிரியர்கள் கண்டு பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் இவ் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.