கடந்த 11.03.2013 அன்று MySoft-2U நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வெளிநாடு செல்பவர்களுக்கான இலவச வழிகாட்டல் பயிற்சிப் பட்டறையினை – முதல்கட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர்.
இப் பயிற்சிப் பட்டறையின்போது – வெளிநாடு செல்லவேண்டும் என்று நினைத்ததில் இருந்து, வேலை வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்ளும் வரையுள்ள அனைத்து கட்டங்களும் ஒவ்வொன்றாக விபரிக்கப்பட்டன.
இன்ஷா அல்லாஹ், வெளிநாட்டில் தான் செய்ய விரும்பும் வேலை பற்றிய “ஐடியா“ எப்படி இருக்க வேண்டும்..? அதற்காக தாம் எவ்வாறான தயாரிப்புக்களில் ஈடுபட வேண்டும்..?, என்ன என்ன ஆவணங்களை ஒழுங்கு செய்ய வேண்டும்..? விமான நிலையங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன..? தங்குமிட சாப்பாடு ஒழுங்குகள் எப்படி அமையும்..? புதிய நாட்டில் ஏமாற்றுக்காரர்கள் பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்க வேண்டும்..? பல கலாச்சார மக்களிடையே பழகுவது எப்படி..? வேலைவாய்பொன்றை தேடுவது எப்படி.? நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி..? சம்பளம் மற்றும் பிற சலுகைகள் பற்றிய பேரம்பேசல் எவ்வாறு அமைய வேண்டும்..? சிறந்த வேலையைப் பெற்ற பின் பாதுகாப்பது எப்படி..? போன்ற பல்வேறு முக்கிய விடயங்களுக்கான வழிகாட்டல்கள் இப் பயிற்சிப் பட்டறையின்போது – வழங்கப்பட்டன.
அத்துடன் – தொழில்நுட்பத் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புக்கள், அவற்றுக்கான உதாரண வேலைகள் காட்டப்பட்டதுடன், சுய விபரக் கோவை அமைப்பு முறையும் விளங்கப்படுத்தப்பட்டது.
மேலும், வெளிநாடுகளின் – அலுவலக அமைப்பு வீடியோக்கள், நேர்முகப்பரீட்சை வீடியோக்கள், இன்டர்நெட்டை வேலைவாய்ப்புகளை இணங்கான பயன்படுத்தும் முறை போன்றனவும் விளங்கப்படுத்தப்பட்டன.
கடைசியாக, MySoft-2U அலுவலகத்தில் – குறிப்பிட்ட பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்காக Demo Interview ஒன்றும் அதனது பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம்.மஸாஹிம் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சி.ஜிஹாக் அஹமட் ஆகியோரினால் நடாத்தப்பட்டதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றன.
குறிப்பிட்ட பயிற்சிப் பட்டறையில் – கலந்துகொண்ட மாணவர்கள், தங்களது கருத்துக்களை வெளியிடும்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றி இதுவரை தாங்கள் கொண்டிருந்த அச்சம் இப்பயிற்சிப் பட்டறையினூடாக நீங்கியதாக தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்..
குறிப்பு :- MySoft-2U யின் வெளிநாடு செல்வோருக்கான அடுத்த இலவசப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், 077 55 214 55 அல்லது 077 8992902 என்ற தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளவும்.