தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும், பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையிலும் தகைமை பெறும் அங்கத்தவர் களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டம், மீண்டும் இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை, மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, தற்போது வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள 2011ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்திபெற்று, பல்கலைக்கழகத் தகைமை பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தில் உயர்கல்விபயில வழங்கப்படவுள்ள இப்புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க, தொடர்ச்சியாகச் சந்தா செலுத்தும் அங்கத்தவர்களின் பிள்ளைகள் தகுதியுடையவர்கள்.
மாவட்ட அங்கத்தவர் தொகை, விண்ணப்பதாரிகளின் தொகை என்பவற்றின் அடிப் படையில் வழங்கப்படவுள்ள இப்புலமைப் பரிசில் பெறத் தகுதியானவர்கள், 075 6580565, 077 5509039 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, விண்ணப்பத்தைப் பெற்று, 2013.03.31 க்குமுன், பொதுச் செயலாளர், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், 128, அன்பு வீதி, அக்கரைப்பற்று–01 (32400) எனும் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு சங்கம் கேட்டுள்ளது.