(ஒலுவிலான்)
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகமானது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த தலைவருமான மாமனிதர் மர்ஹூம் அல்ஹாஜ் அஷ்ரப் அவர்களின் அயராத முயற்சியினால் 1995 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இது இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரத்தையும் பெருமையையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. தற்போது இப்பல்கலைக்கழகமானது குவைத் அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் இலங்கையில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு எடுட்டுக் காட்டாக அண்மையில் அதிமேதகு ஜனாதிபதியவர்களால் இங்கு பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டதை கூறலாம்.
இப்பல்கலைக்கழகத்தில் தற்போது பொறியியல் பீடத்துடன் சேர்ந்து மொத்தமாக 5 பீடங்கள் அமையப்பெற்றுள்ளன. இங்கே தான் இலங்கையில் தனித்துவமான இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் அமையப்பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகமானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கிடைக்கப்பெற்ற ஒரு மிகப்பெரிய சொத்துஇமைல் கல் என்றால் மிகையாகாது. இப்பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் கடந்த் காலங்களில் நடாத்திக் காட்டிய ஒலுவில் பிரகடணம் மூலம் உலகுக்கு இலங்கை முஸ்லிம்களின் வகிபாகத்தை வெளிக்கொணர்ந்து முஸ்லிம் தேசியத்தை உலகுக்கே பறை சாட்டியது.
இலங்கை பல்கலைக்கழகங்களிலேயே முஸ்லிம்களை அதிகளவு கொண்டுள்ளது தென் கிழக்கு பல்கலைக்கழகம் தான். அது மட்டுமல்லாமல் இதுவரை இப்பல்கலைக்கழகம் சமூகத்துக்கு செய்த சேவைகளானது இனவாதி சம்பிக்க இது ஜிஹாதின் தொட்டில் என கூறும் அளவுக்கு இஸ்லாமிய பணி செய்துள்ளது.
ஆனால் தற்போது இதன் கலாச்சாரம் எங்கே போகிறது தெரியுமா?. உயர் கல்வி அமைச்சினால் உறுதியாக தடை செய்யப்பட்ட பகடிவதையின் மைதானமாக ஒலுவில் வளாகமும் விளையாட்டு வீரர்களாக முக்கியமாக முஸ்லிம் பெண்களும் மாறியிருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இதற்காக அம்பாறை மாவட்ட கரையோர வதிவிடமொன்றின் சிரேஷ்ட பெண் மாணவிகள் தனது இளைய மாணவிகளை காலை முதல் மாலை வரை வைத்து இட்ட நிபந்தனைகள் என்ன தெரியுமா? இவை பொதுவான நிபந்தனையாம்.. எல்லா மாணவிகளுக்கும் உரியதாம்...
1. கறுத்த ஹபாயாவுடன் old fashion லேஸ் வைத்த ஸ்காப் கறுப்போ வெள்ளையோ மட்டுமே அணிய வேண்டும். அத்துடன் ஸ்காபிற்கு 5 pin குத்த வேண்டும். அதை ஒவ்வொரு நாளும் எண்ணுவார்களாம்.
2. old fashion செருப்பு அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் குதி உயர்ந்த் செருப்பு அணியவே கூடாது.
3. எக்காரணம் கொண்டும் குடை பிடிக்க கூடாது. எடுத்து வரவும் கூடாது.
4. மட்டையிலான 5 ரூபா பெறுமதியான பைல் உடன் 2 வெள்ளை பேப்பர் மட்டுமே எடுத்து வர வேண்டும்.
5. ஒரு பேனை மாத்திரமே எடுத்து வர முடியும். அதற்கு முக்கியமாக மூடி இருக்கவே கூடாது.
6. மாணவர்கள் வீட்டிலிருந்து வருவதாயினும் பகலுணவு எடுத்து வர கூடாது. Canteen ல் மட்டுமே சாப்பிட வேண்டும்.
7. மாணவிகள் கைப்பை எடுத்து வர முடியாது. காசை கையிலேயே எடுத்து வர வேண்டும்.
8. மாணவிகள் கைலேஞ்சு பாவிக்க முடியாது.
இவ்வாறு இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சிரேஷ்ட மாணவர்களிடம் இது சம்பந்தமாக விசாரித்த போது மேலும் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் வெளிவந்தன. பகடிவதையில் கூடுதலாக ஈடுபடுவது வீடுகளில் இருந்து வரும் பெண் மாணவிகள் தானாம். அத்தோடு அவர்கள் மாணவிகளுக்கு வேப்பிலை, மருந்து வகைகளை உண்ண கொடுப்பதாகவும் அறிய முடிந்தது.
அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள senior களுக்கும் தனித்தனியாக அவ்வூரை சேர்ந்த இளைய மாணவர்கள் இணைந்து party வைக்க வேண்டுமாம். அதிலே ஆண் மாணவர்கள் முன்னால் பெண்மாணவிகள் பாடி ஆட வேண்டும். இது தான் தற்போதைய நிலை. எங்கே செல்கிறது நமது முஸ்லிம் பெண் குலம்.?
தாய் தந்தை பிள்ளைகளை பல்கலைக்கழகம் சென்று படித்து வா என்று சொல்லி அனுப்பினால் மாணவிகள் செய்யும் கேலிக்கூத்து எத்தனை பெற்றோருக்கு தெரியும்? ஒரு சமூகத்தில் படித்து நண்ணெறி உடையவராக வருவார்கள் என நினைத்து பெற்றோர்இ பாடசாலை, சமூகம் என அனைவரும் எதிர்பார்த்திருக்கும் போது மாணவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் தகர்த்து இஸ்லாத்தையும் புதைக்கிறார்கள்.
தனது இளைய மாணவர்கள் என்றால் அவர்களுக்கு தன்மானம்இ சுய மரியாதை இல்லையா? மாணவிகளே இவ்வாறான கேவலமான செயல்களை செய்ய உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? நீங்கள் யாராவது ஒருவரை அவமானப்படுத்தினால் அல்லாஹ் நிச்சயமாக உங்களை அவமானப்படுத்துவான். பாதிக்கப்படும் மாணவிகளின் துஆவிற்கு நீங்கள் பயப்படவில்லையா?
பொது பல சேனா சிங்கள ராவய ஹெல உறுமய போன்ற தீவிரவாத அமைப்புக்கள் ஹிஜாபுக்கு எதிராக பேசும் இத்தருணத்தில் நீங்கள் அதற்கு எண்ணெய் ஊற்றுகிறீர்களா? இவ்வாறான வேலைகளை நீங்கள் செய்வீர்களாயின் உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் நாளை மறுமையிலே உங்களுக்கு எதிராக சமூகத்தை காட்டி கொடுத்தவராக உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பான்மை சமூகத்தவர்கள் முண்ணிலையில் இஸ்லாமிய முண்மாதிரிகளை காட்டாவிடினும் பரவாயில்லை அதனை கொச்சப்படுத்தாதீர்கள்.
அன்பான பெற்றோர்களே! பல்கலைக்கழகங்களில் படிக்கும் உங்களது பிள்ளைகள் செய்யும் வேலைகளை நீங்கள் அறிவீர்களா? உங்களது பிள்ளைகளை கவனிக்கிறீர்களா? முஸ்லிம் பெண் பிள்ளைகள்தான் இங்கே கூடுதலாக பகடிவதை செய்பவர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பகடிவதையில் உங்கள் பிள்ளைகள் கைது செய்யப்படக்கூடும். அதற்கான உயர்கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை இங்கு கிளிக் செய்து பாருங்கள்.http://www.ugc.ac.lk/attachments/706_Circular919t.pdf
எனவே இந்த விடயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், பல்கலைக்கழக நிருவாகம், புத்திஜீவிகள், சிவில் சமூகம் இணைந்து பகடிவதையற்ற சகோதரத்துவமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்க முன்வர வேண்டும். அத்துடன் அங்கே நடைபெறும் பகடிவதை உடனுக்குடன் இனிமேல் வெளிக்கொண்டு வரப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவும்.