2011 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை இந்த மாத நடுப் பகுதியில் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ள 90 வீதமான மாணவர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஷனிக்கா ஹரிம்புரேகம கூறியுள்ளார்.
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பொறியியல் பீடத்திற்கு 99 மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.
ஏற்கனவே சில மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான நான்காம் கட்ட தலைமைத்துவ பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி நிறைவில் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.