தலா 70 இலட்சம் ரூபா வழங்கினார் ஜனாதிபதி
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இணைந்து மருத்துவ கல்வியை தொடர வாய்ப்பு2011ம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் மூன்று 'ஏ' சித்திகளைப் பெற்றும் மருத்துவ கல்லூரிக்கு சேர முடியாமல் போன மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புலமைப்பரிசில்களை வழங்கினார்.
அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி அவர்கள் ஒரு மாணவருக்கு தலா 70 இலட்ச ரூபா வீதம் 10 மாணவர்களுக்கு புல மைப்பரிசில்களை வழங்கினார்.
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இணைந்து மருத்துவ கல்வியை தொடர்வதற்காகவே இவர்களுக்கு இப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி அமைச்சின் மீளாய்வுக்கூட்டம் நடைபெற்ற போது குறித்த மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானத்தில் மூன்று ஏ திறமைச் சித்தி பெற்றும் மருத்துவ கல்லூரிக்கு சேர முடியாமல் போனமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்தே அவர்களுக்கு மேற்படி புலமைப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மூன்று ஏ சித்திகளைப் பெற்ற 6 மாணவர் கள் உட்பட 10 மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில்களை வழங்கினார். மேற்படி மாணவர்கள் அரசாங்க மருத்துவ கல்லூரிக்கு உள்வாங்கப்படுவதற்கு அவர்களது இஸட் புள்ளிகள் குறைவாக இருந்தன. இவர்களுக்குரிய இஸட் புள்ளிகள் மூலம் அரசாங்க பல் மருத்துவ கல்லூரிக்கே உள்வாங்கப்பட முடியும் என்ற நிலையில் மருத்துவ கல்லூரியில் இணைவதற்கு ஏதுவாக இம்மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண தெரிவித்தார்.
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பேராசிரியர் மல்காந்தி உட்பட மாலபே மருத்துவ கல்லூரி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கணிப்பீடுகளை தயாரிக்க அரசாங்கம் தீர்மானம்
இதேவேளை 2013 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெறுகின்ற க. பொ. த. (சா/த) பரீட்சையில் பிள்ளைகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கும் நோக்கில், கணிப்பீடுகளை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாடத் திட்ட பணிப்பாளர்கள் ஊடாக இதனை பாடசாலைகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதனூடாக பரீட்சையில் கேள்விகளுக்கு முகம்கொடுக்கும் விதம், பதிலளிக்கும் விதம் மற்றும் காலத்தை பயன்படுத்தும் விதம் பற்றியும் கடந்த வினாத்தாள்கள் மற்றும் பதில்கள் என்பவற்றுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதன் ஆரம்ப நிகழ்ச்சித் திட்டம் நேற்று (28) ஊவா மற்றும் வட மேல் மாகாண ஆசிரிய ஆலோசகர்கள், பாடத்திட்ட பணிப்பாளர்கள் 200 பேரின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டதாக கூறிய பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார இத்திட்டத்தை விரைவில் பாடசாலைகளுக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறினார்.
பாடசாலை மாணவர்கள் வாழ்க்கையில் முகம்கொடுக்கின்ற முதலாவது தடை தாண்டல் பரீட்சைக்கு தோற்றும் விதம் பற்றி இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு விளக்க உள்ளதாகவும், இதனூடாக மாணவர்களின் பரீட்சை பற்றிய மனப் பயத்தை இல்லாமல் செய்வதே நோக்கமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
thinakaran