உலகின் மிகப்பெரிய சமூக இணையதளம் 2010ஆம் ஆண்டு (முஹம்மத் ஸல் அவர்களை) மதிப்புக்கேடான வரைபடம் ஒன்றை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் மில்லியன்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்தியது என மில்லத் பேஸ்புக்கின் ஸ்தாபகத் தலைவரான உமர் ஸகீர் மீர் பேஸ்புக்கில் மதிப்புக்கேடான செயல்களும் சமூக இணையதளங்களில் முஸ்லிம் இளைஞர்களின் விதிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானில்நடைபெற்ற மாநாட்டின் போது தெரிவித்தார்.
உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும் இருதி நபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலக முஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார்.

2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் மில்லத்பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மில்லத்பேஸ்புக் திறக்கப்பட்டு பத்து நாட்களில் 3இலட்சம் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டது. தற்போது மில்லத்பேஸ்புக் ஐந்துஇலட்சம் பாவனையாளர்களை கொண்டு இயங்குகிறது. மில்லத்பேஸ்புக்கின் முகவரி (http://www.mymfb.com)