இதன் முதற் தொகுதியினர் எதிர் வரும் டிசம்பர் 27 முதல் 2013 ஜனவரி 12ம் திகதி வரையும் பயிற்சி பெறுவதுடன் 2ம் தொகுதியினர் 2013 ஜனவரி 16ம் திகதி முதல் 2013 பெப்ரவரி முதலாம் திகதி வரை மற்றும் மூன்றாம் தொகுதியினர் 2013 பெப்ரவரி 12ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதி வரையும் தலைமைத்துவப் பயிற்சிகளை பெறுவர் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது .
முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த முறை நிறைவேற்றப் படுமா ?
கடந்த ஆண்டு 2011 முதல் தடவையாக இராணுவ முகாம்களில் மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி நெறி ஆரம்பித்த போது, முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு நேரடியாக சவாலாக ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி , முஸ்லிம் பெண்களின் உடை , வதிவிடம் , ஐந்து வேலை தொழுகை , ஜும்மாஹ் தொழுகை, ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இனம் காணப்பட்டது. அதேவளை பொதுவில் மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ, மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்டபட்டது. இவற்றில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு சாதகமான தீர்வுக்கான போக்கை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளிப்படுத்தினார்.
அவற்றில் பல வற்றுக்கு உடனடியாக தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்த உயர் கல்வி அமைச்சர் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறு முகாம்களில் பயிற்சிகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டியபோது ”இந்த பிரச்சினைகள் என்னிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறு முகாம்களில் பயிற்சிகளை ஏற்பாடு செய்திருப்பேன் அடுத்தவருடன் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறாக பயிற்சி நெறியை ஏற்பாடு செய்தால் உங்களுக்கு சரிதானே” என்று அமைச்சரை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் கூட்டம் ஒன்றில் பேசிய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கான அடுத்த தலைமைத்துவ பயிற்சிக்கு முன் முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத் தக்கது .
source-lankamuslim