கல்விக்கே முதலிடம்
(எம்.எம்.ஏ. ஸமட்)
2013ஆம் ஆண்டின் பாடசாலைத் தவணை அட்டவணைக்கான சுற்று நிருபம் கல்விக்கே முதலிடம் எனும் பெயரில் நூல் வடிவில் கல்வி அமைச்சினால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
(எம்.எம்.ஏ. ஸமட்)
2013ஆம் ஆண்டின் பாடசாலைத் தவணை அட்டவணைக்கான சுற்று நிருபம் கல்விக்கே முதலிடம் எனும் பெயரில் நூல் வடிவில் கல்வி அமைச்சினால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கல்விக்கே முதலிடம் எனும் பெயர் சூட்டப்பட்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் தாங்கிய நூலில் 2013ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாத்திலும் இடம்பெறும் நிகழ்வுகளுக்கான தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் 2013ஆம் வருடத்துக்கான அரச பொது விடுமுறைக்குரிய தினங்;களும் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோரின் ஆசிச் செய்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
20.09.2012ஆம் திகதியிடப்பட்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2012ஃ41 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் முதலாம் தவணை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக 2013 ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்டவுள்ளன. முதலாம் தவணையானது ஏப்;ரல் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும்.
இரண்டாம் தவணைப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி திறக்கப்படும் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மூடப்படும். அத்துடன் மூன்றாம் தவணையானது செம்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பித்து டிசம்பர் மாதம் 6ஆம் திகதி நிறைவடையுமென கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை ஜனவரி 2ஆம் திகதி முதலாம் தவணைப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படும் சகல முஸ்லிம் பாடசாலகளும் ஏப்ரல் 9ஆம் திகதி மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளினது இரண்டாம் தவணையானது ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்து ஜுலை மாதம் 5ஆம் திகதி நிறைவடைவதுடன் மூன்றாம் தவணையானது ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆரம்பி;து டிசம்பர் 6ஆம் திகதி நிறைவடையுமென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 2013ஆம் வருடத்துக்கான பாடசாலைத் தவணை அட்டவணையிக்கான சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2013ஆம் ஆண்டின் மொத்தப் பாடசாலை நாட்கள் 210 என அச்சுற்றுநிருபத்தில சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,