அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Thursday, December 6, 2012

இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்களுக்கு

அன்பான வேண்டுகோள்!


(Inamullah M)
பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி இந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி சுமார் 28 இராணுவ முகாம்களில் ஆரம்பமாகிறது.
முதலாவது பிரிவினரது பயிற்சி ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நிறைவுறும், முஸ்லிம் மாணவ மாணவியர் தமக்குரிய இஸ்லாமிய மரபுரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
கடந்த வருட அனுபவத்தை வைத்து சில அறிவுரைகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்:

1) முஸ்லிம் மாணவியர் வகுப்பு கற்கை நடவடிக்கைகளின் போது அபாயா அணிவதாயின் அதனை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு வேண்டுகோள் விஒடுக்கப் பட்டால் ஒரு சிலர் இணங்குகின்ற பட்ச்சத்தில் எமது உரிமை முழுமையாக ப[அரிக்கப் பட்டு விடலாம்.


2) உடற் பயிற்சிகளின் போது அபாயா அணிந்துகொண்டு பயிற்சிகள் செய்வது சிரமம் ஆகையால் எல்லா மாணவியரும் வெள்ளை நிற சல்வார் கமீசும் வெள்ளை நிற தலைச் சீலையும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள், வெவ்வேறு கலர்களில் அணிந்தால் ஒரு சீருடை பிரச்சினை தோன்றலாம்.


3) ஆண் பெண் கலப்பு நிகழ்வுக
ள்
 பயிற்சிகளை சென்ற முறை தவிர்க்க முடியாமல் போனது, ஆனால் முஸ்லிம் ஆண் மாணவர்களும் முஸ்லிம் பெண் மாணவர்களும் விடாப்பிடியாக நின்றால் ஒரு வேளை எமது உரிமையை தக்க வைத்துக் கொள்ளலாம். முஸ்லிம் மாணவியர் தயங்கும் பட்ச்சத்தில் கடந்த முறை முஸ்லிம் ஆண் மாணவர்கள் அடுத்த இன மத மாணவியரோடு தாராளமாக கூட்டு நிகழ்வுகளில் ஆர்வம் காட்டியமை இராணுவ அதிகாரிகளால் சுட்டிக் காட்டப் பட்டமை இங்கு கவனத்திற் கொள்ளப் பட வேண்டும்.


4) தொழுவதற்கான நேரங்களை பெற்றுக் கொள்வதோடு கண்டிப்பாக சகலரும் வேளா வேளை தொழுது கொள்ள வேண்டும்.


5)முகாம்களில் ஜும்மா தொழுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம், அல்லது வெளியே அருகில் உள்ள பள்ளி வாயலகளுக்கு சென்று வரும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.


6) வழங்கப் படும் கோழி இறைச்சி ஹலால் என தங்களால் உறுதி செய்து கொள்ள முடியாவிடின் அதனை சாப்பிடுவதனை எல்லோருமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும், சில மாணவர்கள் தாரளமாக அவற்றை சாப்பிட்டதாக கடந்த முறை சுட்டிக் காட்டப் பட்டது.


முஸ்லிம் நிறுவனங்கள் குறிப்பாக ஊடகவியலாளர்கள் இவ்வாறான அறிவுறுத்தல்கள் பலகலை கழகங்களுக்கு தெரிவாயுள்ள மாணவர்கள் கவனத்திற்கு கொண்டு வரல் வேண்டும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உயர்கல்வி அமைச்சரை கடந்த முறை சந்தித்து சில வேண்டுகோள்களை முன்வைத்தது போன்று இம்முறை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் சந்தித்து இராணுவ முகாம் அதிகார்களுக்கு உரிய பணிப்புரைகளையும் வழங்க முன்கூட்டியே ஆவன செய்ய வேண்டும்.
முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயத்தில் கடந்த முறை போலன்றி அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும்.