(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் 5வது வருடமாக நடாத்தப்படும் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியில் சங்கத்தின் தலைவர் அஹமட் முனவ்வர் தலைமையில் நடைபெற்றது.
விஷேட அதிதியாக கலந்து கொண்ட சிங்கப்பூர் புதிய நிலா தமிழ் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிங்கப்பூர் தமிழ் நாடு நற்புறவுச் சங்கத்தின் துணைத்தலைவரும், இலக்கிய ஆர்வலரும், சிங்கப்பூர் நாணய மாற்றுச் சங்கத்தின் தலைவருமான எம். ஸெய்யத் ஜஹாங்கீர் கலந்து கொண்டார்.
9 ஏ சித்தி பெற்ற மாணர்களுக்கு அதிதிகாளால் விருதுகள் பணப்பரிசுகள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் குழுக்கள் அடைப்படையில் 10 மாணவர்கள் உம்மா கடமையை நிறைவேற்ற செல்வதற்கான உதவிகளும் வழங்கபட்டது.
ஆத்துடன் கண்பார்வையற்ற நிலையில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற சிங்கள மாணவியும் விருதும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரதம அதிதி டொக்டர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் திருமதி அமீனா முஸ்தபா, கல்லூரி அதிபர் கஜர்ஜான் மன்ஸூர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், சங்க போசகர் எம்.எஸ்.எச் முஹம்மட், சங்க தலைவர் அஹம்மட் முனவ்வர் டொக்டர் எம்.எஸ்.அனீஸ், பொதுச் செலாளர் எஸ்.எம்.ஹிஸாம், கலாநிதி யூசுப் கே மரைக்கார் உட்பட பல பிரமுகர்கள்; கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பெறமதியான பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன.