
2013 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவனையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
முதலாம் தவணை ஜனவரி 2 தொடக்கம் ஏப்ரல் 5 வரை, இரண்டாம் தவணை ஏப்ரல் 22 தொடக்கம் ஆகஸ்ட் 2 வரை ,மூன்றாம் தவணை செப்டெம்பர் 2 தொடக்கம் டிசம்பர் 2 வரையுமாகும்.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைக்களுக்குரிய முதலாம் தவணை ஜனவரி 2 தொடக்கம் ஏப்ரல் 9 வரை, இரண்டாம் தவணை ஏப்ரல் 17 தொடக்கம் யூலை 5 வரை, மூன்றாம் தவணை ஆகஸ்ட் 12 தொடக்கம் டிசம்பர் 6 வரை என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.