முதல் மூன்று இடங்களையும் முஸ்லிம்களே பெற்றுள்ளனர்.
இலங்கை சட்டக்கல்லூரியின் 2013 கல்வியாண்டில் கற்கை நெறியினைத் தொடர்வதற்கு 309 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இதில் 191 சிங்களவர்களும் 78 முஸ்லிம்களும் 40 தமிழர்களும் அடங்குவர். முதல் மூன்று இடங்களையும் முஸ்லிம்களே பெற்றுள்ளனர்.
இலங்கை சட்டக்கல்லூரியின் 2013 கல்வியாண்டுக்கான நுழைவுப்பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைப்பெற்றது. பரீட்சைக்கு சுமார் 12000 பேர் விண்ணப்பித்திருந்தும் சுமார் 8000 பேரே பரீட்சை எழுதியிருந்தனர். மூன்று மொழிகளிலும் நடைபெற்ற இப்பரீட்சையில் 80 வீதமான சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 15 வீதமான ஆங்கில மொழி மூல பரீட்சார்த்திகளும் 5 வீதமான தமிழ் மொழி மூல பரீட்சார்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை சட்டக்கல்லூரி நுழைவுக்கான வெட்டுப்புள்ளி 69 ஆகும்.
தெரிவு செய்யப்பட்ட முதல் ஐம்பது இடங்களில் 28 முஸ்லிம்கள் உள்ளடங்கியிருக்கின்றனர்.
ஆர்.எச்.எப். நுஸ்ரத் 87 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் எம்.எச்.இசட்.அஸ்ரா,எம்.எச்.எம்.சிராஸ் ஆகியோர் 84 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.