(31ஆம் திகதி திங்கட்கிழமை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் .மேலதிக விபரங்களுக்கு 067-2250279 (அம்பாறை) 065 - 2240159 (மட்டக்களப்பு) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் )அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 42 கற்கைநெறிகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 15 தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 59 பயிற்சிநெறிகளுக்குமே இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தளபாட உற்பத்தி, மின்னியல் தொழில்நுட்பம், வாயுசீராக்கல் மற்றும் குளிரூட்டலில் தேசிய சான்றிதழ், மோட்டார் வாகன தொழில்நுட்பம், மோ.சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருத்துனர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், இலத்திரனியல் தொழில்நுட்பம், இயந்திரவியல் தொழில்நுட்பம், அழகுக் கலைஞர் மற்றும் சிகை அலங்காரத்தில் தேசிய சான்றிதழ் போன்ற பாடநெறிகளுக்கும் ஆரையம்பதி தொழிற்பயிற்சி நிலையம்; வழங்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், அழகுக் கலைஞர் மற்றும் சிகை அலங்காரம் போன்ற கற்கைகளுக்கும் வாழைச்சேனை தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர் ஆகிய பாடநெறிகளுக்கும் வெல்லாவெளி நிலையத்தின் மரக் கைவினைஞர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், தையல் பாடநெறிகளுக்கும் காத்தான்குடி பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர், கணிய அளவையியலில் டிப்ளோமா பாடநெறிகளுக்கும் ஓட்டமாவடி பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் கற்கைக்கும்; ஏறாவூர் மற்றும் கல்லடி தொ.ப. நிலையங்களால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பயிற்சி நெறிக்கும் விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் பட்டிப்பளை தொழிற்பயிற்சி நிலையத்தின் மின்னியல் தொழில்நுட்பம், கட்டட கைவினைஞர், தொழில்சார் தையல் கற்கைகளுக்கும் வாகரையிலுள்ள பயிற்சி நிலையத்தின் மேசன், மரக் கைவினைஞர் பயிற்சிநெறிகளுக்கும் ஓந்தாச்சிமடம் தொ.ப. நிலையத்தின் மோ.சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துனர், படகு இயந்திரத் தொழில்நுட்பம், அலுமீனியம் பொருத்துனர், விவசாய உபகரண தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளுக்கும் களுவாஞ்சிக்குடி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், தையல், மின்னியல் தொழில்நுட்பம், இலத்திரனியல் தொழில்நுட்பம், உருக்கு ஒட்டுவேலை தொழில்நுட்பம் கற்கைகளுக்கும் வவுணதீவு தொ.ப.நிலையத்தினால் வழங்கப்படுகின்ற மரக் கைவினைஞர், மேசன், நீர்க்குழாய் பொருத்துனர் ஆகிய பயிற்சிநெறிகளுக்கும் செம்மண்ணோடை பயிற்சி நிலையத்தின் நீர்க்குழாய் பொருத்துனர் பயிற்சிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள நிந்தவூர் (மாவட்ட) தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தொழிற்சாலைக்கான மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், வானொலி தொலைக்காட்சி மற்றும் அதனோடிணைந்த உபகரணங்கள் திருத்துதல், தையல் (பெண்கள்), சாரதிப்பயிற்சி போன்ற கற்கைகளுக்கும் சம்மாந்துறை தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், தொழிற்சாலை மின்னிணைப்பாளர், வாகன திருத்துனர், குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கி திருத்துதல், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர், ஆடைதொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், பேக்கரி தொழில்நுட்பம், மோட்டர் வைண்டிங் போன்ற பயிற்சிகளுக்கும் மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல் (பெண்கள்), ஒட்டுவேலை செய்பவர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மோ.சைக்கிள் - முச்சக்கரவண்டி திருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் பொத்துவில் தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு மின்னிணைப்பாளர், மர கைவினைஞர், அறை பராமரிப்பாளர், சமையற்காரர், உணவு பரிமாறுபவர் ஆகிய கற்கைகளுக்கும் காரைதீவு பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், மர கைவினைஞர், அலுமீனியம் பொருத்துனர், நிர்மாண கைவினைஞர் ஆகிய கற்கைகளுக்கும் அக்கரைப்பற்று நிலையத்திலுள்ள மோட்டர் வைண்டிங், வீட்டு மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகளுக்கும் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், வீட்டு மின்னிணைப்பாளர் பயிற்சிகளுக்கும் இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் மர கைவினைஞர் கற்கைநெறிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு 067-2250279 (அம்பாறை) 065 - 2240159 (மட்டக்களப்பு) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, December 30, 2012
மட்டு., அம்பாறை மாவட்டங்களில் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
Sunday, December 30, 2012
News