அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Monday, April 23, 2012

உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு; The world's first library, history of library

library with grid bookshelves
புத்தக பொக்கிஷம் என்று அழைக்கப்படும் நூலகங்கள் பற்றி . 
வரலாற்று தகவல் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஒரு தலைமுறை
மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு சென்றடைவது நூலகங்களின் வாயிலாகத்தான்
என்றால் மிகையில்லை.

சரி இந்த நூலகம் என்ற அமைப்பை உலகில் முதன் முதலில் நிறுவியவர்கள் யார் என்ற கேள்வி உங்கள்
முன் எழுந்தால் உங்களது பதில் எதுவாக இருக்கும் பிரிட்டன், பிரான்ஸ் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ..,ம்ம்ஹீம் பண்டைய காலங்களில் மெசபடோமியர்கள் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஈராக்கியர்கள் தான் உலகில் முதன் முதலில் நூலகம் என்கின்ற அமைப்பை ஏற்படுத்தியவர்கள், என்ன நண்பர்களே ஆச்சர்யமாக இருக்கிறதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

பண்டைய மெசபடோமியப் பிரதேசம் என்பது தற்போதைய டைகிரிஸ் மற்றும் யுபிரட்டஸ் ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகும். முன்பு மெசபடோமியா என்ற ஒரே பெயரால் அழைக்கப்பட்ட கண்டம் தற்போது
ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கண்டத்தில் குறிப்பிடத்தக்க நான்கு பேரரசுகளாக விளங்கியவை சுமேரியா, பாபிலோனியா, அசிரியா மற்றும் அக்காத்தியர் ஆகும். மிகவும் புகழ் பெற்ற நாகரீகங்களாக உலகம் அடையாளம் கண்ட பாபிலோனியா மற்றும் சுமேரியா போன்ற நாகரீகங்கள் இங்கிருந்து பிறந்ததுதான்.

ஏறத்தாழ 3300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாக துறையில் ஏற்பட்ட குளறுபடிகளை களைய அப்போதைய அசிரியப் பேரரசின் அரசரான சென்னாசெர்ப் (கி.மு.1300 – கி.மு.1200)அரசாங்கத்தின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி அவற்றை சூளைகளில் சுட்டு காயவைத்து பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக வைக்கும்படி உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள், அரசாணைகள், அரசாங்க கடிதங்கள், அரசு உளவாளிகளிடம்
இருந்து பெறப்படும் உளவு அறிக்கைகள் அரசு நிர்வாகத்துறையின் கீழ் வரும் முக்கிய ஆவணங்கள் போன்றவை களிமண் தகடுகளில் எழுதி சூளைகளில் சுட்டு அரசு கருவூலங்களிலும் சில கோவில் கருவரைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளடைவில் உயிர்காக்கும் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்கள் போன்றவையும் எழுதி பாதுகாப்பாக
வைக்கப்பட்டது.

அசிரியப் பேரரசின் கடைசி அரசரான அசுர்பானிபல் (கி.மு.700 – கி.மு.600)காலத்தில் இக்களிமண் தகடுகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தையும் தாண்டியது, அத்தனையையும் வெவ்வேறு இடங்களில் வைத்து பாதுகாப்பது சிரமமாக இருந்த காரணத்தினால் அனைத்தையும் அசிரியாவின் (தற்போது ஈராக்) தலைநகரான நினிவாஹ் (Nineveh
– தற்போது மொசூல் (Mosul) ஒன்றிணைத்து அவற்றை துறைவாரியாக பிரித்து அடுக்க உத்தரவிட்டார். இதன்படி ஒவ்வொரு களிமண் தகடுகளும் துறை வாரியாக பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு என்று விடப்பட்டது. இதுதான் உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் The Royal Library of Ashurbanipal என்ற பெயரில் அழைக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான களிமண் தகடுகள் அரசாங்க ஆவணங்களாகத்தான் இருந்தது.

இந்த நூலகத்தை பற்றி தற்செயலாக கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் (கி.மு.356 – கி.மு.323)நேரில் சென்று பார்வையிட்டார், அதனைதொடர்ந்து Ashurbanipal நூலகத்தை போல் அல்லது அதனைக்காட்டிலும் பிரம்மாண்டமான ஒரு நூலகத்தை கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருள் தோன்றியது. எகிப்த்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதி வந்த அந்தக்காலத்தை அலெக்ஸாண்டர் சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டார், இதனைத் தொடர்ந்து எகிப்த்திலுள்ள அலெக்ஸாண்ட்ரியா நகரில் இதற்கான ஆயத்த பணிகள் துவங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் கல்வி, கலை, இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் இருந்து சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாப்பிரஸ் தாள்களில் எழுதப்பட்டது.

பணிகள் துவங்கிய சிறிது காலத்திலேயே அலெக்ஸாண்டர் இறந்து போனாலும் அலெக்ஸாண்டரின் நெருங்கிய
நண்பரும் அப்போதைய எகிப்தின் அரசருமானதலாமி (Ptolemy I; கி.மு.305 - கி.மு.282)முன்னின்று பணிகளை மேற்பார்வையிட்டு நிறைவு செய்தார். இறுதியாக கி.மு.300-ல் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஏழு லச்சதிற்க்கும்
அதிகமான பாப்பிரஸ் தாள்களை கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டு The Royal Library of Alexandria என்று பெயரிடப்பட்டது.

அதன் பிறகு ஆக்ஸ்போர்டு போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் நூலகத்தின் பயன்பாடுகளை அறிந்து தங்களது
பல்கலைக்கழக வளாகங்களிலிலேயே நூலகங்களை நிறுவத்தொடங்கின. அதன் பிறகு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நூலகங்கள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து தன்னை வளர்த்துக்கொண்டு ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது.