(பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு)
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளின்படி அகில இலங்கை ரீதியில் அதிகளவான மாணவர்கள் சித்தி பெற்ற வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கணிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த 13 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ திறமைச் சித்திகளை பெற்றுள்ளனர்.
9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்கிளப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், இம்மாணவர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் வலயக்கல்வி, கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்து குறித்த கல்வி வலயங்களுக்கும் வழ்த்துச் செய்தினை அனுப்பியுள்ளதாக பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி ருஷ்வின் தெரிவித்துள்ளார்.
இதில் காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் 4 மாணவிகளும், மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 3 மாணவிகளும், மீராபாலிகா தேசிய பாடசாலையில் 3 மாணவிகளும், மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் ஒரு மாணவனும், காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 9 ஏ திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.
காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் – எம்.எப்.நஸ்ஹா, ஏ.எச்.எப்.சிப்னா, ஏ.எச்.எப். ஷஹானா, கே.எம்.எப்.றிப்லா,
மில்லத் மகளிர் வித்தியாலயம் – பி.இ. இப்திகா, எச்.எப்.ஷப்றா, கே.எம்.எப்.சுமையா,
மீராபாலிகா தேசிய பாடசாலை – ஏ.இ.அம்றா, என்.பஹீமா, ஏ.பி.இப்தியா,
மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை – எம்.எச்.எம். அப்துல்லா
மட்டக்களப்பு சிசிலியா பாடசாலையிலிருந்து – ஏ.ஆர்.எப். அஸ்பா
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி – யாசீர் யாசீன்
ஆகியோர் 9 பாடங்களிலும் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.
இதில் காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்திலிருந்து முதற் தடவையாக 4 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ திறமை சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.