(இலங்கையில் முஸ்லிம் கல்வி)
1 கல்விக்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை முஸ்லிம் கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்வில்லை. இதனால் கல்வி இயல்பாகவே பாதிக்கப்படுகின்றது.
2.மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலான தொழில் வாய்ப்புக்களின் பால் இளைஞர்களின் கவனம் வெகுவாக ஈர்க்கப்படுகின்றமை.
3.இலங்கையில் பொதுவாக நிகழும் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை கல்வி பற்றிய மனப்பாங்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.
4.தேசியக் கல்விக் கொள்கையின் குறைபாடுகள்.
5.முஸ்லிம் மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்கக் கூடிய வழி காட்டல் முயற்சிகள் நிறுவனமயமாகாமல் இருத்தல்.
6.வழிகாட்டல் முயற்சிகள் நிறுவனமயமாகாமல் இருத்தல்.
7.முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பொருளாதார வளப் பற்றாக்குறை.
8.நிரப்பப்படாமலுள்ள ஆசிரியர் மற்றும் உயரதிகாரிகளின் வெற்றிடம்.
9.பெற்றோர் பழைய மாணவர் பங்குபற்றல் போதாமை( இது ஓர் முக்கிய காரணி ).
எனவே, இலங்கை முஸ்லிம்களின் கல்வியை உயர்த்த வேண்டுமாயின் கல்வியை ஊக்குவிக்கும் சமூக நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
நிருவாக முகாமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கான நிறுவன ரீதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் மொழிக் கல்வி விரிந்த கண்ணோட்டத்தில் நோக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்பால் முஸ்லிம் பெற்றோர்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
(இலங்கையில் முஸ்லிம் கல்வி)
ஒரு பாடசாலையின் கல்வி மேம்பாடு நான்கு அடிப்படைக் காரணிகளின் சுமூகமான பங்குபற்றுதலிலேயே தங்கியுள்ளன. ஆசிரியரின் பாத்திரம், பெற்றோரின் பங்கேற்பு, தலைமை ஆசிரியரின் முகாமைத்திறன், வெளியிலுள்ள நிருவாகத்தின் மேற்பார்வையும் வள ஒதுக்கீடும் இதில் பிரதானமானவை.
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்ப உள்ள ஒரே வழி கல்வியில் கல்லூரிகளில் முஸ்லிம் பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே. இதேவேளை உள்ளக முகாமைத்துவத் திறன்களும் அதகரிக் கப்பட வேண்டும். கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்த அநேக முஸ்லிம் அதிகாரிகள் எமது கல்வி மேம்பாட்டில் பங்க ளிக்க முடியும். இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பொறுப்புள்ளது.
வெளியக வினைத்திறனுள்ள மேற்பார்வையை உறுதி செய்ய முஸ்லிம் பாடசாலைத் தொகுதிகளை உள்ளடக்கிய வலயங்களும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் நியமிக்கப்பட வேண்டும். கோட்டக் கல்விப் பணிப்பாளர்,ஆலோசகர்களின் பணி மேலும் வினைத்திறனுள்ளதாக மாற்றப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவுக்கான காரணிகளை தனித் தனியாக ஆராய்ந்து தீர்வு காண்பது கடினம். ஏனெனில் இக்காரணிகள் பல்வேறு தரப்பினர்களுடன் தொடர்புற்றதாகவும் ஒன்றோடொன்று இணைந்ததாகவும் இருக்கின்றது. எனவே, முஸ்லிம் கல்வியில் முக்கியமாக சுட்டிக் காட்டப்படும் சில அவதானங்களே இங்கு சுருக்கமாக முன்வைக்கப்படுகின் றது.