அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, April 15, 2012

தனியார் பல்கலைக்கழகங்கள் ஏன்?



இலங்கையில் 60 வயதைக் கடந்து விட்ட இலவசக் கல்வி தற்போது அதிர்வுகளைச் சந்தித்துள்ளது. இலங்கையின் அனைத்துச் சிறார்களுக்கும் பாடசாலைக் கல் வியை இலவசமாக வழங்கக்கூடிய வளங்களை அரசாங்கம் கொண்டி ருக்கின்றது. ஆனால் உயர் கல்விக் குத் தகுதி பெறுபவர்களில் ஏறக் குறைய 16 % தொடக்கம் 20% வரையான மாணவர்களுக்கு மட் டுமே உயர்கல்வியை வழங்கக் கூடிய வளங்களை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. 80% இற்கு மேற்பட்ட உயர் கல்விக்கான தகுதி வாய்ந்த மாணவர்களுக் கான உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. முன்னைய காலத்தில் க.பொ.த (உ/த) உடன் தொழில்களைப் பெறக் கூடிய தாயிருந்தது. எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் பட்டப்படிப்பின்றி தொழில் பெறு தல் கடினமாயமையலாம். எனவே உயர்கல்விக்குத் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.

தெற்காசிய நாடுகளில் இலங்கை தனிநபர் வருமானம், எழுத்தறிவு வீதம் என்பவற்றில் உயர்நிலை யில் உள்ள போதிலும், பல்கலைக் கழகப் பட்டம் பெற்றோரின், வீதத் தில் பின்தங்கிக் காணப்படுகின்றது.

இலங்கையில் ஆயிரம் பேருக்கு ஒருவரே பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களாகியுள்ளனர். கல்வி என்பது விற்பனைக்குரிய பண்ட மல்ல. அது மக்களின் அடிப்படை உரிமை. அதனை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதற்கப்பால் இலவசக் கல்வி யானது நூறு வீதம் இலவசமாக உள்ளதா? பாடசாலைக் கல்வியை இலவசமாக வழங்கக்கூடிய வளத்தினை இலங்கை அரசு கொண்டிருந்த போதும் ஏற்கனவே இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் உள்ளன. அதுமட்டுமன்றி எந்தவொரு இலங்கைப் பல்கலைக்கழகமும் பட்டப்பின்படிப்பினை இலவசமாக வழங்கவில்லை.

ஏற்கனவே முதலீட்டு சபையின் கீழ் பதியப்பட்ட பட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் பல நாட்டில் செயற்படுகின்றன.தகுதியற்ற வசதி படைத்த வர்கள் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவே தனியார் பல்கலைக் கழகங்கள் அறிமுகப்படுத்தப்படப் போகின்றன என்பது சிலரது வாதம். ஏற்கனவே ஆண்டுதோறும் மிகவும் வசதிபடைத்த 10,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களைப் பெறுவதற்காக வெளி நாட்டுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். எனவே தகுதிபெற்றும் பண வசதி இல்லாத நடுத்தர வர்க்கத்தி னர் தனியார் பல்கலைக்கழகங்க ளால் பயன் பெறலாம். மேலும் அரசாங்கம் கூறுவது போல தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் நிறுவுவதால் அந்நியச் செலாவணியையும் மீதப்படுத்தலாம்.

உலகிலேயே மிகச்சிறந்த பல் கலைக்கழக கல்வி முறையைக் கொண்ட நாடாக அமெரிக்கா திகழ் கின்றது. அந்நாட்டில் 3 வகையான பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவையாவன,

1) அரச பல்கலைக்கழகங்கள்


2) இலாப நோக்கற்ற தனியார் பல்கலைக்கழகங்கள்.


3) இலாப நோக்குள்ள தனி யார் பல்கலைக்கழகங்கள் என்பன வாகும்.


அமெரிக்காவில் உள்ள 2000 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங் கள் மற்றும் கல்லூரிகளில் 60% இற்கு மேற்பட்டவை இலாப நோக்கற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும்.

உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் Harward, M.I.T, Stanford மற்றும் பிரபல்யமான League பல்கலைக்கழகங்கள் போன்றவை இலாபநோக்கற்ற மற்ற தனியார் பல்கலைக்கழகங் களே. இவ்வகையான பல்கலைக் கழகங்களில் ஈட்டப்படும் இலாப மானது பங்குதாரர்களுக்கு வழங் கப்படுவதில்லை. அதற்குப் பதி லாக அவ்வாறு ஈட்டப்படும் இலா பம் புலமைப்பரிசில்களாகவோ, வேறு வழியிலோ அந்தப் பல்கலைக் கழகத்திலேயே மீள மூலதனம் இடப்படும்.
இந்தப் பல்கலைக்கழகங்கள் Charity மற்றும் Endowments எனப்படும் நன்கொடை மற்றும் உதவி நிதியங்களினாலேயே ஸ்தாபிக்கப்பட்டவை.

இலங்கையில் தனியார் பல் கலைக்கழகங்கள் அறிமுகப்படுத் தப்படுமாயின் அமெரிக்காவில் உள்ளதுபோல் இலாப நோக்கற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பத்தக்கன. ஆனாலும் அவ் வாறான பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்குத் தேவையான அளவு நன்கொடை மற்றும் உதவி நிதியங்கள் இல்லாதவிடத்து மூலதனம் தனியாரிடம் இருந்தே பெறப்படவேண்டும். மூலதனம் இடும் தனி நபர் இலாபத்தையும் எதிர் பார்ப்பார். ஆனாலும் கல்வி விற்பனைக்குரியதொரு பண்ட மல்ல. எனவே தனியார் பல்கலைக் கழகத்தினை ஸ்தாபிப்பவர் கொள்ளை இலாபமீட்டுவதைத் தடுக்கும் வகையில் இலாப உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும். அவ் வாறு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம் புக்கு அதிகமாக பெறப்படும் இலா பம் அந்தப் பல்கலைக்கழகத்தினுள் புலமைப் பரிசிலாகவோ வேறு வழி யிலோ மீள மூலதனமிடப்படுதல் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

தற்போது கட்டுப்பாடுடின்றி மூலதனச் சபையில் பதிந்து இயங் கும் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் யாவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மேற்பார்வை யின் கீழ் உயர்கல்வி அமைச்சி னுள் உள்வாங்கப்பட வேண்டும்.
மேற்படி இந்த நிறுவனங்களுக் காக ஒரு தரமான தரக்கட்டுப்பாட் டுத் திட்டம் (Quality Assurance and Accreditation system) பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவால் நடைமுறைப்படுத்தப் படவேண்டும்.

இலங்கையில் அமையப்போகும் தனியார் பல்கலைக்கழகங்கள் இலாபமீட்டுவதையோ வசதி படைத்தோருக்கு பட்டங்களை விற்பதையோ நோக்கமாக கொண் டவையாக அமையாது. உயர் கல்வி வாய்ப்பை இழந்து நிற்கும் தகுதி படைத்த 80% இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உண்மையி லேயே சேவை வழங்குவதையே நோக்காக கொண்டு அமைதல்வேண்டும்.

மேலும் தகுதியுடைய ஒரு மாணவனிடம் பண வசதி இல்லை என்பதால் அவனுக்கான உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படலாகாது.

பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு ஆண்டுதோறும் உயர்தரப் பரீட்சை முடிவுகளினடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களின் ஒவ் வொரு துறைக்குமான வெட்டுப் புள்ளிகளை அறிவிக்கின்றது. தனி யார் பல்கலைக்கழகங்கள் ஸதாபிக் கப்படதன் பின்னர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வருடம் தோறும் உயர்தரப் பரீட்சை முடிவு களினடிப்படையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் ஒவ் வொரு துறைக்குமான வெட்டுப் புள்ளிகளை அறிவித்தல் வேண்டும்.

உதாரணமாக அரச பல்கலைக் கழகத்தில் ( ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக்கு) மருத்துவத் துறைக்கான வெட்டுப்புள்ளி நிய மப்புள்ளி அடிப்படையில் 2.5 ஆக இருக்குமாயின் தனியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கான வெட்டுப் புள்ளி 2.5 இலும் சற்றுக் குறைவாக 2.2 ஆக அமையலாம் குறிப்பிட்ட துறைக் கான மானிய ஆணைககுழுவால் அறிவிக்கப்பட்ட வெட்டுப்புள் ளியிலும் அதிக நியமப்புள்ளி உள்ள மாணவர் மாத்திரமே தனி யார் பல்கலைக்கழகத்தில் அத்து றைக்கு அனுமதிக் கப்பட முடியும்.

தனியார் பல்கலைக்கழகங்க ளில் 20% இடங்கள் புலமைப்பரி சில்களாக இலவசமாக உள்நாட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் என அரசு கூறுகின்றது. தனியார் பல்கலைக்கழகங்களில் 60% மான இடங்கள் உள்நாட்டு மாணவர்க ளுக்காக ஒதுக்கப்படல் வேண்டும் மிகுதி 40 %மான இடங்களை மூன்று மடங்கு அதிகமான கட்ட னங்களுடன் தனியார் பல்கலைக் கழகங்கள் வெளிநாட்டு மாணவர் களுக்கு வழங்க முடியும்.

உள்நாட்டு மாணவர்களில் 20%மானவர்கள் புலமைப்பரிசி லுடன் இலவசமாகக் கற்கும் அதே சமயத்தில் மிகுதி 40% மாணவர்க ளுக்கு தனியார் பல்கலைக்கழகத் தில் கற்பதற்கான குறைந்த வட்டிக் கடன்களை அரசு வழங்கவேண்டும். அவ்வாறு அரச கடனில் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கான கட்டணங்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவினூடாக தனியார் பல்கலைக் கழகங்களுக்கு செலுத்தப்பட வேண் டும். அரச கடனில் படிக்கும் மாண வர்கள் தொழில் பெற்றதும் கட னைப் பகுதி பகுதியாக திருப்பிச் செலுத்தும் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

இவ்வகையில் இலங்கையில்,

*அரச மற்றும் தனியார் பல் கலைக்கழகங்கள் காணப்படும்.

*அனைதுப் பல்கலைக்கழ கங்களும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அவ தாணிக் கப்படும்.

*அரச பல்கலைக்கழக ங்களில் அனுமதி பெறும் மாண வர்கள் முற்றிலும் இலவ சமாக உயர்கல்வியைப் பெறுவர்.
*தனியார் பல்கலைக்கழகங்களிலும் 20% மாணவரகள் இலவசமாக உயர்கல்வியைப் பெறுவர். மிகுதி 40%மான அரச கடனில் உயர் கல்வியைப் பெறுவர்.

இவ்வாறான ஒரு நடைமுறையில் தகுதி படைத்த எந்தஎவாரு மாணவனும் பணவசதியில்லாத காரணத்தால் உயர் கல்விவாய்ப்பை இழக்க மாட்டான். தனியார் பல்கலைக்கழக சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது . அச்சட்ட மூலத்தில் மேற்படி இலாப நோக்கற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படக்கூடியதான சரத்துக்கள் அமைதல் வேண்டும்.

இலங்கையில் வங்கித்துறை, போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்ற பல துறைகளில் தனியார் அனுமதிக்கப்பட்டார்கள். அனாலும் தனியாரை அறிமுகப் படுத்தமுன் மேற்படி அரச நிறுவனங்கள் தனியாருடன போட்டியிடக் கூடியவாறு வளர்த்தெடுக்கப்பட்டன அந்த வகையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அறமு ப்படுத்தப்படுமாயின் உலகின் பிரபல்யமான Monash, MIT பல்கலை க்கழகங்களை இங்கு தமது வளாகங்களை ஸதாபிக்கலாம். அவற்றுடன் போட்டியிடக்கூடியவாறு அரச பல்கலைக்கழகங்களும் தரமுயர்த்தப்பட வேண்டும் . அந்த வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கூறுவது போன்று மொத்த தேசிய வருமானத்தில் ஆகக் குறைந்தது 6% ஆயினும் உயர் கலவிக்காக ஒதுக்கப்படல் வேண்டும் மேற்கூறப்படது போன்ற இலாபநோக்கற்ற தனியார் பல்கலைக்கழகங்களால் அரச பல்கலைக்கழகங்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டியை கொடக்கமுடியும் அவ்வாறாயின் தற்போது வங்கித்தறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை என்பன மக்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவது போல அரச பல்கலைக்கழகங்களும் மாணவரை மையமாகக் கொண்ட கற்பித்தலை வழங்கும்

தற்போது இலங்கையில் எந்தவொரு பல்கலைக்கழகமும் சர்வதேச தர வரிசைப்பட்டியல்களில் முதல் 2000 இடங்களினுள் இல்லை இவ்வாறான ஆரோக்கியமான போட்டியால் அரச பல்கலைக்கழகங்களின் தரம் உயரலாம்.

இலங்கையின் மட்டப்ப டுத்தப்பட்ட உயர்கல்வி வாய்ப்பு பாடசாலைகளில் மாணவரினை கல்வி சாரா திறன்கனை வளர்க்காது பந்தயக் குதிரைகளாக கல்வி கற்கும் போக்கை உருவாக்கி விட்டுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களால் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படின் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களின் போட்டிப் பரீட்சைக்கான வெறித்தனமான தயார்ப்படுத்தலில் தளர்வு ஏற்ப்படலாம்.

எனவே தனியார் பல்கலைக்கழகங்கள் எமக்கு வேண்டாம் என மறுப்பதைக் காட்டிலும் எவ்வகையான தனியார் பல்கலைக்கழகங்கள் எமக்குத் தேவை என ஆராய்ந்து அவ்வகையான பல்கலைக்கழகங்களின் தோற்றத்திற்கான செயற்பாடகளில் ஈடுபடுவது புத்திசாலித்தனமானது.

கலாநிதி செ.அறிவழகன்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கணித புள்ளிவிபரவியல் துறை,