சிறந்த பெருபேருகளை பெற்ற மாணவ மாணவியர் பாராட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச்சபை 2011ஆம் கல்வியாண்டில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி 9 பாடங்களிலும் ஏ அதியுயர் சித்திகளையும், அதே போன்று கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அதில் கலை மற்றும் வர்த்தகத் துறைகளில் மாவட்டத்தில் 10வது நிலைக்குள் தெரிவு செய்யப்பட்வர்களும், கணித விஞ்ஞான துறைகளில் 28வது நிலைக்குள்ளும் பொறியியல் மற்றும் வைத்திய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டு காத்தான்குடி சமூகத்திற்கும் தமது பாடசாலைகளுக்கும் பெருமையைப் பெற்றுக் கொடுத்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்றை இன்று 2012-04-13 வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகைக்குப் பின் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப்பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருந்தது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் தலைவரும் காழி நீதிபதியுமான ஏ.எம்.ஹிழுறுவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி பிரதி அதிபர் மௌலவி அலியார் (பலாஹி) சட்டத்தரணி ஜவாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி 9 பாடங்களிலும் ஏ அதியுயர் சித்திகளை பெற்ற காத்தான்குடி பதுரியா வித்தியாலய மாணவர்களான எப்.எம்.நஸ்ஹா, ஏ.எச்.எப்.சிப்னா, ஏ.எச்.எப்.ஷஹானா, கே.எம்.எப்.றிப்லா ஆகியோரும் மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகளான பி.இ.இப்திகா, எச்.எப்.சப்ரா, கே.எம்.எப்.சுமையா ஆகியோரும் மீராபாலிகா தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஏ.ஏ.எப்.அம்றா, ஏன்.பஹீமா, ஏ.பீ.இப்தியா ஆகியோரும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் எம்.எம்.எம்.அப்துல்லாஹ் மற்றும் மட்டக்களப்பு சிசிலியா பாடசாலையில் இருந்து ஏ.ஆ.எப்.அஸ்பா மட்டக்களப் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஏ.வை.ஏ.யஸீர் யாஸீன் ஆகியோரும், கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி அதியுயர் சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்களான எம்.ஆர்.எம்.இபாம், எம்.ஏ.என்.ஜெஸான் அஹமட், எம்.எஸ்.எம்.இபாம், ஏம்.ஆர்.எம்.செய்னுல் ஹக், ஆர்.எப்.றிபாஸா, ஏ.பீ.எப்.தாஹினா, எஸ்.ஐ.எப்.றிபானா, எம்.ஏ.சீ.எம்.றிஸா, ஏ.ஏ.அப்துன் நாபி ஆகியோரும் அல் அமீன் வித்தியாலய மாணவி கே.எம்.பாத்திமா றிகாஸா மற்றும் மீரா பாலிகா தேசியப்பாடசாலையின் மாணவிகளான எம்.ஏ.ஸீனா சிபா. எம்.ஏ.சீ.நஸ்லுன ;சித்தாரா. ஏம்.பீ.ஐனுல் றிஸ்தா. ஏம்.ஏ.எப்.சிஹாமா. எம்.எம்.எப்.மசாமிஹா ஆகியோரும் மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி எம்.யு.எப்.சிஹாமா உட்பட மாதம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற எம்.பீ.எப்.றிகாஸா ஆகியோருமே பரிசில்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
ஆண்களுக்கான பரிசில்களை உரிய மாணவர்கள் சமுகமளித்து பரிசில்களை பெற்றுக்கொண்டதுடன் பெண் மாணவிகளுக்கான பரிசில்களை அவர்களது பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தேசிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் அதிக மாணவர்கள் சித்தி பெற்ற கல்வி வலயமாக இம்முறை மட்டக்களப்பு மத்தி வலயம் தெரிவு செய்யப்பட்டமைக்காக அதன் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை 2011ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் கா.பொ.த (சா.த) பரீட்சையில் 9ஏ 8ஏ பெற்ற மாணவர்கள் அதே போன்று கா.பொ.த(உ .த) பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களையும். கற்பித்த ஆசிரியர்களையும். வழிகாட்டிய அதிபர்களையும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் வருடாந்த சாதனையாளர் பாராட்டு நிகழ்வு எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
F.M.பர்ஹான்: source lankamuslim