பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்கு 2012 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் (முஸ்லிம் ஆண்) சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எழுத்துப் பரீட்சையில் மாணவர்களின் மொழித்திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.
க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான தகைமை பெற்ற (இஸ்லாம், கணிதம், தமிழ்) பாடங்களில் சித்தியடைந்த, 2012 ஜனவரி 31 ஆம் திகதிக்கு 17 வயதுக்கு மேற்படாதவர்கள் பரீட்சையில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகப் பரீட்சைகள் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் மாணவர்களுக்கு 24 ஆம் திகதியும் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு 25 ஆம் திகதியும், மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு 26 ஆம் திகதியும் நடைபெறும்.
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், ஆளடையாள அட்டை, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு மூலப் பிரதிகள் பரிசீலிக்கப்படும். மருத்துவ சான்றிதழ் ஏனைய ஆவணங்களுடனும் சமூகமளிக்கும்படி வேண்டப்பட்டுள்ளனர்.
நேர்முகப் பரீட்சைக்கு வருவோருக்கு தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.