தேசிய தொழில்சார் தகைமை முறைமை |
|
பாரம்பரியமாக ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள் தேசியரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாடவிதானங் களைக் கற்பித்து, பரீட்சைகள் நடாத்தி க.பொ.த. (சாதாரண தரம்), க.பொ.த. (உயர்தரம்) சான்றதழ்களை வழங்குகின்றன. மேலும் பல்கலைக்கழக மான்ய ஆணைக்குழுவின் (UGC) மேற்பார்வையின் கீழ்வரும் வளாகங்கள் அவை எத்தகையதாக இருப்பினும், கலை மற்றும் விஞ்ஞானத் துறைகளில் கலைமாணிப் பட்டங்களை வழங்குகின்றன. எவ்வாறாயினும் அரச மற்றும் தனியார் தொழில்சார் பயிற்சி நிறுவனங் களினால் தரப்படும் சான்றிதழ்களும் டிப்ளோமாக்கள் அதுபோன்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பதில்லை. நிலைமை இவ்வாறிருப்பதால் தமது எதிர்காலத்துக்கான வாழ்க்கைத் தொழிற் பாதையை வளமாக அமைக்கும் நோக்கில் இளைஞர்கள் தரமான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தைத் தெரிவு செய்வது புதிராக உள்ளது. இதுபோன்றே ஆட்சேர்ப்பின்போதும் தமது கைத்தொழிற்துறை தேவைகளுக்கு இசைவாகும் விதத் தில் உள்ள எத்தகைய சான்றிதழை ஏற்பது என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது வேலை கொள் வோரும் சிரமமான இடத்திலேயே உள்ளனர்.
| |
|
ஆகவே மூன்றாம்நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழு தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வழிகாட்டலில் TEDP என்றவாறாக சகல அரச தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் செய்திறன் அபிவிருத்திச் செயற்றிட்டம் என்பவற்றுடன் ஒன்றிணைந்து 7 மட்டங்களைக் கொண்ட தேசிய தொழில்சார் தகைமை முறைமையொன்றை (NVQ) அறிமுகஞ் செயய நடவடிக்கை எடுத்துள்ளது. அநேகமான அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிஶத்தியடைந்துவரும் நாடுகள் NVQ முறைமை யின் ஐந்தாவது மட்டத்துக்கு ஒப்பான தொழில்சார்திறன் சான்றளிப்பு முறைமைகளை அறிமுகஞ் செய்துள்ளன. தற்போது அவ்வாறான முறைமையொன்று உண்மையாக அவ்வாறான நாடு களில் நடைமுறைமையிலுள்ளது. இத்தகைய நிலையில் NVQ சான்றிதழ் மட்டங்கள் தொடர்பான செய்திறன்கள் மீதான சர்வதேச விழிப்புணர்வு அறிவு மற்றும் செய்திறன்களைப் போலவே நடைமுறை யிலுள்ளன. க.பொ.த. (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த (உயர்தரம்) பொறுத்தளவில், தேசிய ரீதியாக வும் சர்வதேசி ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு முறையாகவும் உள்ள அதுவும் ஒன்றிணைக்கப் பட்டதொன்றாக உள்ளாக தேசிய தொழில்சார் தகைமை முறைமையைக் கொள்ளலாம்.
| |
| | |
| NVQ முறைமையை அமுல்படுத்தல் | |
|
NVQ முறைமையானது மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) நேரடி கண்காணிப்பின் கீழ் அமுல் செய்யப்படுகின்றது.
TVEC யினால் தேசிய திறன் தரங்களை விருத்தி செய்வதற்காகத் தொழில் இனங்காணப்பட்டதும் அவர்கள் NAITA வுக்கு அறிவிப்பர். இதனைத் தொடர்ந்து தேசிய திறன் தரங்களை வரைபைத் தயாரிப்பதற்காக கைத்தொழில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படுவதுடன் இதற்கென பொதுமக்களின் அபிப்பிராயமும் நாடப்படும்.
NAITAயின் கீழ் உள்ள தேசிய கைத்தொழில் பயிற்சி ஆலோசனைக் கமிட்டி, சம்பந்தப்பட்ட தேசிய திறன் தரங்களை செல்லுபடியாக்குவதுடன் குறிப்பிட்ட தொழிலுக்கான அதே தேசிய திறன் தரத்தை ஏற்றுக் கொள்ளும்.
NVQ சான்றிதழ்களை வழங்குவதற்கான கணிப்பீடு NITE-SL இனால் பயிற்றப்பட்டு NAITA வினால் பதிவு செய்யப்பட்ட அனுமதி பெற்ற கணிப்பீட்டாளரால் மேற்கொள்ளப்படும்.
ஒரு தேர்வுநாடி கணிப்பீட்டின் போது சித்தியடைந்து, தேர்ச்சியுடையவராகக் காணப்படின் சம்பந்தப்பட்ட NVQ சான்றிதழ் TVEC யின் பணிப்பாளர் நாயத்தினதும் பயிற்சி நிறுவனத்தின் அதிபரினதும் ஒப்பங்களைக் கொண்டதாக வழங்கப்படும்.
விருப்பமுடையோர்களுக்காக தேசிய திறன் தரங்கள் உசாவுதலுக்கென சகல வாழக்கைத் தொழில் வழிகாட்டல் நிலையங்களிலும் தொழில்சார் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சின் கீழுள்ள கற்றல் வளப் பயன்பாட்டு நிலையங்களிலும் கிடைக்கக்கூடியதாக உள்ளன. சம்பந்தப்பட்ட NVQ மட்டங்களுக்காகத் தேவைப்படும் தேர்ச்சிகள் தேசிய திறன் தரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
| |
| | |
| NVQ சான்றிதழ்களைப் பெறும் வழிகள் | |
| NVQ சான்றிதழ்களைப் பெறுவதற்கான இருவழிகள் உள்ளன: | |
|
திறன் தரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள் தொடர்பாக தனது தேர்ச்சிகள் பற்றி போதுமானளவு சான்றுகளை ஒரு தேர்வு நாடி நிரூபிப்பாரோயாயின், RPL மூலமாக NVQ சான்றிதழைப்பெற அவர் தகுதியுடைய வராவார். இது முன் கற்றலை அங்கீகரித்தல் என்றழைக்கப் படுகின்றது.
NVQ சான்றிதழைப் பெறுகின்ற இன்னுமொரு வழி, யினால் சான்றுப்படுத்தப்பட்ட தகைமையுடன் தொடர்புடைய தேர்ச்சி மட்ட பயிற்சிப் பாடநெறயைப் (CBT) பின்பற்றுவதாகும். தேர்ச்சிமட்ட தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழில் பயிற்சி அதிகாரசபை, தேசிய இளைஞர் சேவை அதிகார சபை அல்லது தொழில்நுட்பக்கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் தொழில்நுட்பக் கல்லூரியிலாகும். NVQ சான்றிதழ்களை வழங்குவதற்காக சான்றுப்படுத்தப்பட்ட தனியார் மற்றும் NGO துறை நிறுவனங்களும் தமது பாடநெறிகளை நடாத்துகின்றன.
| |
| | |
| NVQ முறைமையின் அனுகூலங்கள் | |
| | NVQ சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கான நன்மைகள் | |
| |
NVQ சான்றிதழ் ஒரு பயிற்சிச் சான்றிதழல்ல. அது உங்கள் திறன்களை சான்றுபடுத்தும் சான்றிதழாகும். அது தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாகும். அதற்கான தொழிலில் சம்பந்தப்பட்ட NVQ மட்டத்திற்குரிய திறன்களை நீங்கள் கொண்டிருப்பதை அது உறுதி செய்யும்.
இக்கட்டமைப்பைல் உயர் மட்டங்களுக்கான தகைமையைப் பெறுவதற்கும் அனுபவமும் தேர்ச்சியும் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திறன்களைப் பெறுவதற்குமான வாழ்க்கைத் தொழில் வழியுமாகும்.
NVQமுறைமை ஒரு திறன் மதிப்பீட்டு முறைமையாக விருப்பத்துடன் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கான போக்கினைக் கூடுதலாகக் கொண்டது.
திறன் தரங்கள், கைத்தொழிலில் உள்ள வாண்மைத்துவ ரீதியாக தேர்ச்சி மிக்க நபர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறான திறன்சார் கைத்தொழிலில் மேற்கொள்ளப்படவேண்டிய தொழிற்பாடு களையும் கொண்டுள்ளன. ஆகவே NVQ சான்றிதழை வைத்திருப்போருக்கு தொழிலை நாடுவது மிகவும் இலகுவாகும்.
NVQ சான்றிதழைப் பெற்றிருப்போர் உயர்மட்ட தகைமை களைப் பெறுவதில் உற்சாகமுற்றிருப்பார்களாயின் தமது வாழ்க்கைத் தொழில் விருத்தியை மேம்படுத்துவதற்கு இந்த முறைமை ஊக்கமளிக்கிறது.
| |
| | வேலை கொள்வோருக்கான அனுகூலங்கள் | |
| |
கைத்தொழில்களுக்குத் தேவைப்படும் திறன்கள் இனங் காணப்பட்டிருப்பதாலும், NVQ முறைமையினால் சான்றுப்படுத்தப்பட்ட திறன்களை அவை கொண்டிருப்பதாலும் NVQ வைத்திருப்போரை தமது நிறுவனங்களில் வெலைக்கமர்த்துவது மிகச் சிறந்தது.
நிறுவனங்களுக்கான தொழில்நுட்பவியலாளர்களைச் சேர்த்துக்கொள்ள NVQ தகைமை பயன் படுவதுடன் பதவி உயர்வு, கூடிய சம்பளம் போன்றவற்றுக்கும் அது தகுதியுடைய தாகும்.
|