இணையத்தை நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது, உங்களை பின் தொடர்ந்து யார் வருகிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். இதை Real time tracking என்று சொல்வார்கள். பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை Collusion என்ற பயர்பொக்ஸ் உலாவி நீட்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Collusionஐ பயர்பொக்ஸில் நிறுவிய பின்னர் தொடரும் இணையத்தளங்கள், அவற்றின் குக்கீஸ் போன்றவற்றின் விபரங்கள் மற்றும் எத்தளத்திற்கு செல்லும் போது அவை கணணிக்கு வந்தன என்பது பற்றிய விபரங்களை அழகாக கிராபிக்ஸ் வடிவில் தெரிவிக்கின்றது. இதனை நிறுவிய பின்னர் அட் ஒன் பாரில் தெரியும் Collusion ஐகானை அழுத்தினால் மேற்கூறிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.