வாழ்க்கையில் பிரச்சனைகள் எல்லோருக்குமே உள்ளன. முடிந்தவரையில் அதை தீர்க்க முயல்கிறோம், இல்லாவிடின் அதனோடு ஒத்துப் போகிறோம், அல்லது தொடர்ந்து முரண்டு பிடித்துக் கொண்டு வாழ்கிறோம். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அடிப்படையாக சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1) பிரச்சனை இருப்பiதை அறிந்து கொண்டு, அது என்ன பிரச்சனை என்பதை சரியாக புரிந்து கொள்ள முயற்சிப்பது:-
பிரச்சனையையொட்டி வருகின்ற சங்கடங்களும், தலைவலியுமே பிரச்சனை என்னவென்பதை விளக்கிவிடாது. கோபம், எரிச்சல், இயலாமை, அவமானம், சங்கடம், பயம் இவையெல்லாம் பிரச்சனையைப் பற்றிய நம் உணர்வுகள். எதனால் இவை வருகின்றன என்பதை புரிந்து கொள்வது அவசியம். பிரச்சனை என்னவென்பதை தெளிவாக புரிந்து கொள்ளும் வரை, பிரச்சனையை தீர்ப்பது கடினம்.
2) பிரச்சனையை அக்குவேராக பிரித்து அலசிப் பார்ப்பது :-
பிரச்சனைகளுக்கு நிறைய உட்பிரச்சனைகள் இருக்கும். மேலோட்டமாக பார்த்தால் புரியாது. பிரச்சனைகளின் வேர்கள் எளிதில் வெளியே தெரியாது. (உ+ம் : அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிவிடும் 16 வயது பையனின் பிரச்சனை, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் கல்லூரி மாணவி.) பிரச்சனைகளை மாற்றிப் பார்க்கவும், வேறு கோணங்களில் ஆராய்வதும் அவசசியம். பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
3) பலவகையான தீர்வுகளை யோசிக்க வேண்டும் :-
பிரச்சனைகளின் தீவிரத்தை மனதில் கொண்டு, அவைகளை தீர்க்க பல்வேறு உத்திகளை யோசிக்க வேண்டும். எந்த தீர்வும் சரியாக அமையவில்லையெனில், பிரச்சனையை மீண்டும் அலசுவது, புரிந்து கொள்வது அவசியம்.
4) சிறந்த தீர்வை கண்டுபிடிப்பது :-
பெரும் பிரச்சனைகளுக்குள் இருக்கின்ற சிறிய பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம், பெரிய பிரச்சனையை கைக்குள் கொண்டு வரலாம். பிரச்சனைகளின் காரணமாக உண்டாகும் பதட்டங்கள் தணிந்து, பிரச்சனைகளை கையாளும் சோதனை முயங்சிகளில் மனம் ஈடுபடும். இந்த முயற்சிகளினால் உண்டாகும் வெற்றிகள், மனதிற்கு இதமளிக்க, நிரந்தரமான தீர்வுகளுக்கு வழிதேட முடியும். ஒரே வகையான பிரச்சனைகள் என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் தீர்வு காண்பதில்தான் திறமை அடங்கியுள்ளது.
5) பயிற்சி :-
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறைகள், பலரால் பின்பற்றப்படுபவை, உங்கள் வழிமுறையை, பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் அதிகமாகப் பின்பற்றும் வழிமுறையை, நீங்கள் அறிந்து கொள்ள உதவுவதுதான் இந்த பயிற்சியின் நோக்கம்.
பிரச்சனைகளுக்கு எதிராக :-
எப்பொழுதும் கிடையாது (never): 0; எப்பொழுதாவது (rarely): 1 (வாரத்தில் ஒருமுறை): சிலசமயம் (Sometimes): 2 (வாரத்தில் 3-4 முறை); எப்பொழுதும் (regularly): 3 (வாரத்தில் 7-8 முறை); மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான கட்டத்தில் ‘x’ செய்யவும்.
பிரச்சனைகளை தீர்க்கும் உங்கள் திறனை அறிய சில வழிகள். :
1. 30 – 51 வரை நீங்கள் மதிப்பெண்கள் எடுத்திருந்தால் உங்களுக்கு நாளடைவில் இது பெரும் பிரச்சனையாகக் கூடும். இதற்கு வழி அடிப்படையான திறமைகளை வளர்த்துக் கொள்வதுதான்.
2. 18 – 29 வரை நீங்கள் மதிப்பெண்கள் எடுத்திருந்தால் பிரச்சனைகளைத் தீர்க்க சில நல்ல வழிகளை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்த்துக்கள்! இத்திறனில் நீங்கள் நன்கு வளர இந்த கட்டுரையை நன்கு வாசிக்கவும்.
3. 8 – 17 வரை மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்கள் எனில் இத்திறனில் நீங்கள் திறமை மிகுந்தவர். எத்தகைய வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதை மறக்காமல் குறித்துக் கொண்டு அவைகளை விமர்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
thanks to gatherPace