கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்
பரீட்சையின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் பரீட்சை முடிவுகளின் படி சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பிரிலுள்ள 80 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்து அகில இலங்கை ரீதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடத்தினை பெற்றள்ளது.
கண்டி கல்வி வலயம்,76 சதவீதமான மாணவர்கள்சித்தியடைந்து இரண்டாமிடத்தையும், கொழும்பு கல்வி வலயம் 75 சதவிதமான மாணவர்கள் சித்தியடைந்து மூன்றாமிடத்தையும் அகில இலங்கை ரீதியாக பெற்றுள்ளது.
மேற்படி மட்டக்களப்பு மத்தி வலயம் ,காத்தான்குடி, ஏறாவூர்,கோறளைப்பற்று மேற்கு, கோட்டங்களை உள்ளடக்கி 2007ம் ஆண்டு உருவாக்கப்பட் டு தேசிய ரீதியாக பல சாதணைகளைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்