வானொலி அதிர்வெண் தொலைநோக்கி (ரேடியா தொலைநோக்கி,)வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை ஆகும்.வானியல் ஆய்வில் பொதுவாக ஒளியியல் தொலைநோக்கி (கண்ணாடி தொலைநோக்கி) மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும்; மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் தருணங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது.
விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள்.ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் விண்மீன்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும்.