முஹம்மத் ஜான்ஸின்
கல்வியைக் கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதுள்ள அடிப்படைக் கடமையாகவும், இன்னும் அதனைப் பெற்றுக் கொள்வது பிறப்புரிமையாகவும் இருக்கின்றது. இன்னும் அதனை அடைந்து கொள்வதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்தவும் செய்கின்றது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு முதலீடு செய்வது என்பது, மிகச் சிறந்த முதலீடாகும், இன்னும் சொத்துக்களில் எல்லாம் மிகச் சிறந்த சொத்தான அறிவாற்றலுக்கான சக்தியையும், வாய்ப்பையும் அது அதிகரிக்கச் செய்கின்றது என்பதனால், முதலீடு செய்தவற்குரிய மிகச் சிறந்த சொத்தாகும்.
இன்னும் அறிவாற்றல் என்பது எவராலும் உணர்ந்து கொள்ள முடியாது, கணக்கிட முடியாது இன்னும் எவரும் அதனைக் கவர்ந்து செல்லவும் முடியாது, இன்னும் அதனைப் பெற்றவரிடமிருந்து அதனைத் திருடி அழித்து விடவும் முடியாது. இன்னும் இந்தச் சொத்திற்கு எந்த அரசாங்கமும் வரி விதிப்பதும் கிடையாது. அத்தகைய கல்வி அறிவை பெற்றிருந்ததன் காரணமாகவே கடந்த 12 ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் உலகின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்கள்.
இன்றைக்கு உலகில் மிகக் குறைந்த கல்வி அறிவைப் பெற்றிருப்பவர் யார் என்று கணக்கெடுத்தால், முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றார்கள். இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைத் தேடவும், உருவாக்கிக் கொள்வதற்காகவும், பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
இன்றைய உலகில் கல்வி கற்பது என்பது தேசத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது. தனிப்பட்ட மனிதன் கல்வியைத் தேடுவது என்பது, தொழிற்கல்வியைக் கற்று அல்லது உயர்கல்வியைக் கற்று.., சமூகத்தில் தனக்கென மரியாதை உருவாக்கிக் கொள்ளவும், தனது வாழ்க்கை வசதியை மேம்படுத்திக் கொள்ளவும், இன்னும் பணக்காரர்களாக, பதவியுடன், பட்டத்துடன், ஆடம்பரமான வாழ்க்கை வசதிகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமே மிகைத்திருக்கின்றது.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தேசத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காக கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பது அவனது இறைநம்பிக்கையில் எந்த ஊணத்தையும் ஏற்படுத்தி விடாது, ஆனால் ஒரு முஸ்லிமின் அடிப்படை நோக்கம் முற்று முழுதாக பணம் பண்ண வேண்டும் என்பதற்காகவே கல்வியைக் கற்றுக் கொள்வது என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
முஸ்லிம்கள் பிரதானமாக இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாமியக் கல்வி என்றவுடன் முகத்தைச் சுழிப்பவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும், இஸ்லாமியக் கல்வி என்றாலே மத்ரஸா, குர்ஆன், அரபிப்பாடம், ஹதீதுகள், சுன்னா, சீரா, ஃபிக்ஹு, இஸ்லாமிய வரலாறு, இன்னும் அது சார்ந்த பாடங்கள் என்று தானே நினைக்கின்றீர்கள்.
உண்மையில் இதனை விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்றைய உலகில் இரண்டுவிதமான முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். ஒன்று மேற்கத்திய கல்வி அல்லது மதச்சார்பற்ற கல்வி முறையைக் கற்றுக் கொள்பவர்கள், மற்றொன்று மார்க்கக் கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக் கொள்பவர்கள். கடந்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மேற்கத்திய காலனித்துவ ஆதிக்கம், முஸ்லிம்களை மதச்சார்பற்ற கல்வியை நோக்கி விரட்டியது. படிப்பில் சோம்பேறியான அல்லது அதில் அக்கறை காட்டாத பிள்ளைகளை மார்க்கக் கல்வி கற்பதற்காக ஊர் மத்ரஸாக்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இன்னும் மேற்கத்திய நாடுகளுக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய அடையாளங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக மதச்சார்பற்ற கல்வியுடன், இஸ்லாமியக் கல்வியையும் தங்களது குழந்தைகளுக்கு வழங்க விரும்பினர். இதனைத் தான் ‘ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்” என்றழைக்கின்றோம். இன்னும் முஸ்லிம்களிடையே பொருளாதாரம் குறைந்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு நிர்வாகத்தில் இயங்கும் பொதுப் பள்ளிக் கூடங்களுக்கும், இன்னும் வார இறுதி நாட்களில் பள்ளிவாசல் அல்லது இஸ்லாமிய மையங்களில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பி வருகின்றனர். இன்னும், முஸ்லிம்கள் ஒரு பகுதியில் அதிக எண்ணிக்கையில் குடியேறுவது மற்றும் அவர்களது பொருளாதார வளங்கள் அதிகரிப்பது, இதன் காரணமாக அவர்கள் முழு நேர இஸ்லாமிய பாடத்திட்டம் கொண்ட கிண்டர் கார்ட்டன் முதல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரைக்கும் உள்ள கல்வி நிலையங்களைத் திறக்கின்றார்கள்.
(தற்போது இஸ்லாமிய கல்வியியல் வளர்ச்சி பெற்று வருகிறது சாதாரண கல்வியையும் இஸ்லாமிய தத்துவத்துக்கு உட்படுத்தி அதனை இஸ்லாமிய மயப்படுத்திய இஸ்லாமிய சமூகவியல் அதில் இஸ்லாமிய அரசியல் ,இஸ்லாமிய பொருளியல் , இஸ்லாமிய விஞ்ஞானம் அதில் இஸ்லாமிய உயிரியல், இஸ்லாமிய இரசாயனவியல் ,இஸ்லாமிய வானவியல், புவியியல் போன்ற துறைகள் இஸ்லாமிய மயப்படுத்தப் பட்டுவருகிறது )
இந்த அடிப்படையில் வட அமெரிக்காவில் மட்டும் ‘ஒருங்கிணைந்த கல்விக் கொள்கை”யைக் கொண்ட பள்ளிகள் மட்டும் 300 இருக்கின்றன. இன்னும் முழு நேரக் குர்ஆன் மனனப் பள்ளிகளும் இருக்கின்றன. இதன் மூலம் குர்ஆனை முழுவதும் மனனம் செய்த ஹாபிஸாக்கள் உள் நாட்டிலேயே உருவாக்கப்படுகின்றார்கள். குர்ஆனை முழுவதும் மனனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முழு ஆண்டுகள் முழு நேர வகுப்புகளாகத் தேவைப்படுகின்றன. இந்த நாட்களில் இவர்கள் பொதுக்கல்வி அல்லது மதச்சார்பற்ற கல்வியைக் கற்றுக் கொள்வதிலிருந்து விலகி விடுகின்றனர்.
இந்தக் கட்டுரையானது பெற்றோர்கள் எத்தகைய கல்விக் கூடங்களை தங்களது குழந்தைகளுக்கு தேர்வு செய்ய முடியும் என்பது குறித்து ஒரு அலசல் பார்வையை உங்கள் முன் வைக்கின்றது. அதாவது, பொதுப் பள்ளிக் கூடங்கள், பிற மதச்சார்பு கொண்ட பள்ளிக் கூடங்கள், தனியார் மதச் சார்பற்ற பள்ளிக்கூடங்கள், இஸ்லாமிய கல்விக் கொள்கையைக் கொண்ட பள்ளிக் கூடங்கள், ஓரளவு இஸ்லாத்துடன் தொடர்புடைய பள்ளிக் கூடங்கள், இஸ்லாமிய அடிப்படையிலான பள்ளிக் கூடங்கள், வீட்டில் தனியார்கள் பகுதி நேரங்களாக நடத்தும் பள்ளிக் கூடங்கள், இவற்றின் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் பற்றியே இக்கட்டுரை விவாதிக்கும்.
குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டுவதன் பிரதான நோக்கமே அவர்களை தலைமைத்துவப் பண்புகளுக்கு உரித்தானவர்களாக ஆக்க வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். ஒரு இஸ்லாமியனைப் பொறுத்தமட்டில், தன்னுடைய குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டுவதன் பிரதான நோக்கம் இதுவாகத் தான் இருக்க முடியும், இன்னும் அவ்வாறான மதிப்பீடுகளையும் விட அது சற்றும் கற்பனை செய்ய முடியாததும் ஆகும். இன்னும் இஸ்லாமிய கல்விக் கொள்கை மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு இஸ்லாமிய பள்ளிக் கூடத்தின் இறுதி நோக்கம் இஸ்லாமிய பண்பாடுகளில் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இஸ்லாமிய ஆளுமைப் பண்புகளின் அடிப்படை என்பது இஸ்லாமியக் கொள்கைகளாக இருத்தல் வேண்டும்.
இஸ்லாமியக் கல்விக் கூடங்களில் இருந்து வெளிவருகின்ற மாணவர்கள் ஆளுமைப் பண்புகளில் தலைசிறந்தவர்களாக இருப்பதோடு, படைத்தவனின் குறிக்கோளை நிறைவேற்றுபவர்களாகவும், இறைநினைவு கொண்டவர்களாகவும், இன்னும் சக மனிதர்கள் பற்றி அக்கறை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
source-lankamuslim