ஓ.எல். பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் சித்தியடையும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
2011 ஆம் ஆண்டுக்கான ஓ.எல். பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 89.94 சதவீதமான மாணவர்கள் மாத்திரமே இஸ்லாம் பாடத்தில் சித்தியடைந்துள்ளனர்.
இஸ்லாம் பாடத்திற்கு தேசிய ரீதியாக 23583 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.எனினும் 2372 பேர் இஸ்லாம் பாடத்தில் இம்முறை சித்தியடைவில்லை.
2010 ஆம் ஆண்டு 91.55 சதவீதத்தினரும், 2009 ஆம் ஆண்டு 93.27 சதவீதமானோரும் ஓ.எல். பரீட்சை இஸ்லாம் பாடத்தில் சித்தியடைந்துள்ளனர்.
அந்தவகையில் 2011 ஆம் ஆண்டு 89.94 சதவீதத்தினர் மாத்திரமே ஓ.எல். பரீட்சை இஸ்லாம் பாடத்தில் சித்தியடைந்துள்ளமையானது முஸ்லிம் மாணவர்களின் வீழ்ச்சி மட்டத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.