ஆரம்ப வகுப்பு சிறார்கள் எதையும் அறியும் நோக்குடன் அது ஏன் எப்படி? இது ஏன் இப்படி? அது ஏன் அங்குள்ளது? எதற்காக அது கட்டியுள்ளது? என பல்வேறு கேள்விகளையும் கேட்டு விளக்கம் பெற முயல்வர். அப்போது அவர்களுக்குரிய முறையில் உண்மையானதும் சரியானதுமான விளக்கம் கொடுக்கப்படல் வேண்டும். மாறாக அவர்கள் கேள்விகளை உதாசீனம் செய்வது பொய்யான விளக்கம் கொடுப்பது மறைத்துச் சொல்வது விளக்கம் கொடுப்பதற்கு முடியாமல் தண்டிப்பது என்பன அவர்களின் ஆராயவூக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாக அமையும். மேலும் சிறுவர்கள் ஆராய்ந்தறியும் ஊக்கத்துடன் பல்வேறு விடயங்களையும் கையாண்டு பார்க்க முனைவர். அதன் போது தேவையான செயற்பாடுகளைத் தடுக்கவோ அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்தி பயமுறுத்தவோ கூடாது. அதுவும் அவர்களை பாதிக்கும் அவர்களுக்கு எதுவிதமான பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் தேவையான விடயங்களை ஆராய்ந்து அறியவும் கையாண்டு பார்க்கவும் ஆளுமையில் வளரவும் பெரியவர்கள் அவர்களுக்கு துணை செய்வது அவசியமாகும். பெற்றோர் பெரியோர் அன்புடனும் கரிசனையுடனும் உண்மைத் தன்மையுடனும் ஒழுங்கான முறையில் மகிழ்வாக வாழும் போது பிள்ளைகளும் தமது வாழ்வில் அவற்றை பிரதிபலிப்பவர்களாக இருப்பர். வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. பெற்றோர் பிள்ளை தொடர்பு சமூக மாற்றம் ஏற்படுத்தி வரும் தீயவிளைவுகளில் ஒன்று பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் நெருக்கம் குறைந்து வருதலாகும். பெற்றோர் வேலைக்குச் செல்லுதல் இடப்பெயர்வு காரணமாக சிதறி வாழுதல் குடும்பப் பிணக்குகள் மற்றும் பெற்றோர் - பிள்ளைகள் முரண்பாடுகள் போன்ற காரணிகளால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் தொடர்புகள் குறைவடைந்து வருகின்றன. தாயின் அன்பு அரவணைப்பு தந்தையின் முன்மாதிரிகை கிடைக்காமை பிள்ளைகளின் தேவைகள் நிறைவேற்றப்படாமை போன்றவைகளும் தொடர்புகளும் குறைவடைவதற்கு காரணமாகலாம். எனவே கூடியவரைக்கும் வேலைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பிள்ளைகளுடன் கூடியிருந்து கதைத்தல் பாடம் சொல்லிக் கொடுத்தல் முன்மாதிரிகையாக நடத்தல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் பிள்ளைகளுடன் அதிகளவு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆன்மீக வழிகளில் ஈடுபடுத்தல் பிள்ளைகளை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தும் போது அவர்களின் உள்ளத்தில் அமைதியையும் ஆறுதலையும் ஏற்படுத்தமுடியும். மனதை ஒரு முகப்படுத்தி இறைவழிபாடு செய்யும் போது கற்றலிலும் ஒரு நிலைப்படுத்திக் கற்பதற்கு பயிற்சியாக அமையும். இன்றைய அவசரமானதும் ஆடம்பரமானதுமான உலகப்போக்குகளில் ஆன்மீக விடயங்கள் அருகி வருவதைக் காணுகின்றோம். ஆயினும் ஒருசிலரின் ஆர்வத்தையும் காணமுடிகின்றது. எனவே பெற்றோர் தாம் ஆன்மீகவழியில் நடப்பதுடன் பிள்ளைகளையும் ஈடுபடுத்துவது கற்றலின் விருத்திக்கும் நற்சமூக வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். |
Thursday, March 22, 2012
மாணவரின் வாழ்வில் பெற்றோர்-பெரியோர் ..
Thursday, March 22, 2012
Article
சிறுவர்கள் பெரியவர்கள் பேசுவதையும் செய்வனவற்றையும் உற்றுப்பார்க்கின்றனர். தாமும் அதே போல நடந்து கொள்ள எத்தனிப்பர். எனவே பெற்றோர் பெரியார் சிறார்களுடன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உண்மைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதாவது ஒன்றைச் சொல்லி வேறொன்றைச் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை அவர்களால் நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இருக்கும்.