அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Tuesday, March 13, 2012

பயிற்சியால் சிறப்பாகும் உரையாடல் கலை-

ஒருவர் என்னதான் அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும், பலருக்கும் முன்பாக பேசுதல் என்பது ஒரு சவாலான செயல்பாடே. தனது கருத்தை, அது எந்தளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதை தாண்டி, பலரின் முன்பாக எடுத்துரைப்பது பலருக்கும் ஒரு நடுக்கமான செயல்பாடாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் சிலரோ, அக்கலையில் இயல்பாகவே திறமையையும், ஆற்றலையும் கொண்டிருப்பர்.
உலகப் புகழ்பெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், பலரின் முன்பாக(மேடை உள்ளிட்டவை) பேச மிகவும் தடுமாறுபவர் என்று வரலாறு கூறுகிறது. அதேபோல், இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜ் என்பவருக்கும் இந்த விஷயத்தில் நடுக்கமே.

இன்றைய பொருளாதார தாராளமய உலகில், எங்கு பார்த்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள். இன்றைய இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை தருபவை அந்த நிறுவனங்களே. அத்தகைய நிறுவனங்களில், Senior Executive, Team Leader, Team Manager, Project Manager, HR, Maintenance Manager, Store Manager, Purchase Manager and General Manager போன்ற பலவித பணி நிலைகளில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஒரு குழுவின் மூத்த உறுப்பினர் என்ற நிலையிலிருந்து பொது மேலாளர் என்ற நிலை வரை உள்ள பலரும், தமக்கு கீழுள்ள பணியாளர்களின் மத்தியில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்தப் பயிற்சி பலருக்கும் கட்டாயம் தேவைப்படும் ஒரு அம்சமாகிறது.

உரையாற்றுபவர், கேட்போரை திருப்திபடுத்த, பலவித முன்பயிற்சிகளை செய்ய வேண்டியுள்ளது மற்றும் அதற்கேற்ப தனது உரையை தயார்செய்ய வேண்டியுள்ளது.

ஒருவர் ஒரு சிறந்த பேச்சாளராக உருவாக என்ன செய்ய வேண்டும் அதுசார்ந்த தனது பலவீனங்களை வெல்ல எதுபோன்ற முறைகளை கையாள வேண்டும் என்பதை இக்கட்டுரை அலசுகிறது.


அடிப்படை சிக்கல்


உரையாற்ற வேண்டிய ஒருவர், தன்னைப் பற்றி Audience என்ன நினைப்பார்களோ என்று எண்ணி பயந்தே தனது தோல்வியை உறுதிசெய்து கொள்வார். எனது தோற்றம், எனது தகுதி மற்றும் எனது மொழித்திறன் ஆகியவைப் பற்றி Audience தவறாக நினைத்துவிடுவர் மற்றும் மனதுக்குள் ஏளனமாக நினைப்பர் என்று இவரே நினைத்துக்கொண்டு, களத்திற்கு செல்லும் முன்பே வீழ்ந்துவிடுவார்.

சிலர், தன்னைவிட வயதில் மூத்த, படிப்பில் மற்றும் பதவியில் கூடிய, சமூகத்தில் அதிக அந்தஸ்தை கொண்ட நபர்கள் மத்தியில் உரையாற்ற நேர்கையில், தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்படுகிறார்கள்.


வித்தியாசங்கள்


நிறுவனம் மற்றும் தொழில் சம்பந்தமாக, ஒவ்வொரு விதமான உரையும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான பதட்டத்தைக் கொடுக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தயாரிப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவை.

ஒருவர், தனது நிறுவனத்திற்குள் சில விஷயங்கள் தொடர்பாக உரையாற்றுகையில், அவர் அதிகம் நெருக்கடிக்கு ஆளாவதில்லை. ஏனெனில், நிறுவனத்தைப் பற்றிய பல விபரங்கள், அவரது உரையைக் கேட்கும் அவரது சக பணியாளர்களுக்கும் தெரியும். எனவே, அவருக்கு பெரியளவில் நெருக்குதல் இல்லை.

ஆனால், வெளி நிறுவன ஆட்கள் மத்தியில் உரையாற்றுகையில் நெருக்கடி அதிகம். இவரின் உரையை வைத்தே, வெளியாள் நிறுவனம் பற்றியும், இவரைப் பற்றியும் பல விஷயங்களை கணிக்கிறார். தனது பேச்சில் தோல்வியடையும்போது, நோக்கமும் தோற்றுவிடுகிறது.


பிரச்சினையை தீர்ப்பது எப்படி?


உரையாற்றும்போது ஏற்படும் தடுமாற்றத்தையும், பதட்டத்தையும் போக்க வேண்டுமெனில், சிறந்த முன்தயாரிப்பு அவசியம். மேலும், போதுமான மற்றும் சிறந்த தரவுகளும் உங்களிடம் இருக்க வேண்டும். ஒரு விஷயத்தில் நல்ல ஆழமான அறிவை வைத்துள்ளபோது, உங்களுக்கு தன்னம்பிக்கையும் தானாக வருகிறது. நீங்கள் பேச வேண்டிய விஷயத்தில் நல்ல அறிமுகத்தைப் பெறுவதே, பாதி போரை வென்றதற்கு சமம்.

ஏதாவது சிக்கலான கேள்விகளை யாராவது கேட்டு விடுவார்களோ என்ற பயம் பலருக்கு வரும். அதுபோன்ற சிக்கலான மற்றும் புத்திசாலித்தனமான கேள்விகளை எதிர்கொண்டால், அதுகுறித்து பதட்டமடையாமல், கேள்வி கேட்ட நபரை கைதட்டி பாராட்டுவதோடு, இது ஒரு நல்ல கேள்வி என்று கூறி, அடுத்தமுறை கண்டிப்பாக எனது உரையில் இதற்கான பதிலை இடம்பெற செய்வேன் என்று கூற வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். அதேசமயம், உங்களுக்கு உடனடி பதில் தெரியாத கேள்விக்கு, அந்த சமயத்தில் பதிலளிக்க முயல வேண்டாம்.

நீங்கள் பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி மிகவும் அருமையாக தயார் செய்திருந்தும், உங்களுக்கு பயமும், பதட்டமும் ஏற்பட்டால், அதுதான் Stage Fear. இது முற்றிலும் மனம் தொடர்பான ஒரு விஷயம். Stage Fear என்ற ஒரு அம்சத்தை ஒழிக்க சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். தொடர்ச்சியான பயிற்சி என்பது ஒரு வகை. நம் எதிரில் அமர்ந்திருப்பவர்களும் நம்மைப் போன்றவர்களே என்று நினைக்கப் பழக வேண்டும் மற்றும் மிகவும் பிரமாதமாக உரையாற்ற வேண்டும் என்று கற்பனை செய்து பயப்படுவதைவிட, எளிமையாக, அதேசமயம் தெளிவாகவும், நிதானமாகவும் செய்தாலே போதும் என்று நினைக்க வேண்டும். உங்கள் எதிரே அமர்ந்திருப்பவர்கள் உங்களைப் பற்றி வித்தியாசமாக எதுவும் நினைக்கப் போவதில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

உரையாற்றும்போது, ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதை சமாளிக்க முயலாமல், கவுரவமாக சாரி கேட்டுவிட வேண்டும்.


பயிற்சியும் நன்மையும்


உங்களின் உரையானது, சொல்வதையே திரும்ப திரும்ப சொல்வதாகவும், சுவாரஸ்யமற்றதாகவும் இருந்தால், Audience, கொட்டாவி, வேறு பக்கமாக திரும்புதல், அடிக்கடி உடலை அசைத்தல் போன்ற செயல்களின் மூலமாக அதை தெரிவித்து விடுவார். எனவே, இதுபோன்ற பின்னடைவுகளைத் தவிர்க்க, தேவைப்படும் இடத்தில் குரலை ஏற்றி இறக்கியும், உடலசைவுகளைப் பயன்படுத்தியும், முக பாவனையை மாற்றியும் செயல்பட்டு, உங்களது உரையை சுவாரஸ்யமாக்கலாம்.

இந்த நிலையை அடைய பயிற்சிகளும் அவசியம். உங்களது பலவீனங்களைப் பற்றியே யோசிக்காமல், பலத்தைப் பற்றி யோசிப்பது பயத்தை வெற்றிகொள்வதற்கான ஒரு சிறந்த வழி. உரையின் இடையே, நகைச்சுவையை இழைய விடுதல் ஒரு சிறந்த கலை மற்றும் இது அனைவரையும் கவரும்.


மொழித்திறன்


ஒரு உரையின் அடிப்படையே மொழிதான் என்றால் அதில் மிகையில்லை. ஏனெனில், ஒருவரின் மொழித்திறன் ஒரு உரையை சிறப்பாக்கலாம் அல்லது சிதைக்கலாம். ஒரு வாடிக்கையாளரிடம், ஒரு நிறுவன அதிகாரி பேசும்போது மொழிப் பிரச்சினையால் தடுமாறினால், முக்கிய லாபத்தை இழக்க நேரிடும். மேற்கு நாடுகளில் அலுவல் ரீதியான தொடர்புக்கென்று ஒரு பொதுமொழி உள்ளது. எனவே அங்கே பிரச்சினையில்லை. ஆனால் நம் நாட்டில் நிலைமையே வேறு. பன்மொழித் திறமை, குறைந்தது, ஆங்கிலத் திறமையாவது அவசியமாகிறது.

மொழித்திறனை மேம்படுத்துவது முறையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் மட்டுமே சாத்தியம்.


குறிப்பு


உரையாற்றுதல் என்பது மட்டுமல்ல, உலகில் எந்த விஷயத்தை எதிர்கொள்வதற்கும் தன்னம்பிக்கை பிரதான மூலதனம் மற்றும் பலம். எனவே, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் எப்போதும் முனைப்பாக இருங்கள். தொடர்ச்சியான பயிற்சியை விட்டுவிடாதீர்கள்.