ஆரோக்கியமான எதிர் காலத்திற்காக நோய்களை எதிர்கொள்வோம் எனும் தொனிப் பொருளில் கிழக்கு பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் நடாத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி.
மனித உயிர்களில் உலாவுகின்ற நோய்கள் அவை சம்பந்தமான விளக்கங்கள் ,அவற்றில் இருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது போன்ற விடயங்களை உண்மையான உடல் வடிவங்கள் , உடல் மாதிரிகளின் வடிவங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றினூடாக மாணவர்கள் மூன்று மொழிகளிலும் விளக்கமளிக்கவுள்ளனர்.
இங்கு மனித உடல் ஒவ்வொரு தொகுதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு மொத்தமாக 95 காட்சி கூடங்களில் காட்சிபடுத்தபடவுள்ளன. இவை தவிர இரத்த தான முகாம் , அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மெடிக்ஸ் அமைப்பினூடாக கண்காட்சி தொடர்பான சின்னங்களையும் பெறுவதற்கான இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்காட்டும் கண்காட்சி ஆனது பங்குனி 28௮ம் திகதி முதல் தொடர்சியாக 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை பல்கலைகழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.