இன்று முஸ்லிம்கள் எவ்வாறான கல்வி தமது பிள்ளைகளுக்கு வழங்கப் பட வேண்டுமென குழம்பிக் கொண்டிருக்கின்றனர் . மார்க்கக் கல்வியா அல்லது உலகக் கல்வியா வழங்கப்பட வெண்டுமென்ற விடயத்தில் தெரிவை இலகுவாக செய்யமுடியாமல் உள்ளனர்.( இஸ்லாம் கல்வி என்று கூறும்போது மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரித்து நோக்கமல் இஸ்லாமிய நியதிகளை பேணும் அணைத்து கல்வியல் முயற்சிகளையும் ஊக்கு விக்கின்றது )
இஸ்லாத்தை பொருத்தவரை எச்சில் துப்புவது எப்படி என்பது முதல் ஆட்சி செய்வது எப்படி என்பது வரை கூறப்பட்டுள்ள ஒரு மனித வாழ்க்கைத் திட்டமாகவுள்ளது. பிள்ளைகளுக்கு உலகக் கல்வியுள்ளது. ஆனால் மார்க்கம் சம்பந்தான விடயங்கள் தெரியாமல் போகும் போது அது பிரயோசனமற்ற கல்வியாக இருக்கும். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! எனக்கு பிரயோசனமான அறிவையும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அமல்களையும் அல்லது துஆக்களையும் தா! என்று துஆ செய்து வந்தார்கள்.
எனவே கல்வி என்பது வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை இயன்ற வரை கற்று பண்பு பெற வேண்டும். ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இபாதத் மற்றும் அது சம்பந்தமான பூரண அறிவு என்பன ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விடயமாகும். எனவே எக்கல்வியை கற்று முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய அறிவும் மேலும் நற்பழக்க வழக்கங்கள் என்ற அறிவும் அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய கெட்ட பழக்க வழக்கங்கள் எவை என்ற அறிவும் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது.
கிப்லாவை முன்னோக்கி துப்புதல் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் என்பன கூடாது என்று சொல்லும் இஸ்லாம் மக்கள் நடமாடும் பாதைகளிலும் மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் அவ்வாறான காரியங்களை எவ்வாறு மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்ய வேண்டுமென்பதையும் கற்றுத் தருகின்றது. சிலர் பக்கத்து வீட்டார் காணிகளில் குப்பைகளையும் அசுத்தங்களையும் வீசுவர் அதனையும் இஸ்லாம் தடுக்கிறது. நகம் வெட்டுவது எவ்வாறு? மேல் கீழ் ரோமங்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும், கணவனுக்கு மனைவி மீதுள்ள கடமைகள் என்ன? மனைவிக்கு கணவன் மீதுள்ள கடமைகள் என்ன? சமுதாயத்திலுள்ள சிறுவர்களுடன் மற்றும் பெரியவர்களுடன் எப்படி பழகுவது? பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன இப்படி எண்ணிலடங்கா வாழ்க்கைத் திட்டங்களை இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகின்றது.
கல்வி கற்று பட்டதாரியான ஒரு மனிதன் இந்த விடயங்களையும் சரியாகச் செய்யும் போது தான் அவனுக்கு நல்ல கல்விமான் எனும் பட்டம் கிடைக்கிறது. அதேவேளை ஒரு உலமாவாக கற்றுத் தேர்ந்தவர் இந்த விடயங்களில் தவறிழைத்தால் அவரைப்பார்த்து இவர் ஏன் மௌலவியாக வந்தார் என்று கேட்கத் தயங்குவதில்லை. எனவே இபாதத் சம்பந்தமான அறிவும் நல்லொழுக்கங்களை செயல்படுத்தும் மனிதன் தான் நேர்வழி பெற்றவனாக இறைவனிடத்தில் கணிக்கப்படகின்றான். அதற்கு வெகுமதியாக அவனுக்கு கேள்வி கணக்கின்றி சொர்க்கத்தை அல்லாஹ் அளிக்கின்றான். மாற்றமாக இபாதத் இருக்கிறது மார்க்க சம்பந்தமான அறிவு இருக்கின்றது.
ஆனால் செயல்பாட்டில் நல்ல பழக்கவழக்கங்கள் இல்லை என்றால் அவனிடம் கடுமையாக கேள்வி கணக்கு கேற்கப்படும்.அவர்களில் பெருமபாலானவர்கள உளச் சுத்தமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு நரகத்துக்கு அனுப்பப் படுவார்கள். நரக நெருப்பில் இடப்பட்டு அவர்களுடைய உள்ளத்திலுள்ள மாசுகள் எல்லாம் அகற்றப்பட்ட பின்னர் தான் அவர் சொர்க்கத்துக்கு அனுப்பப்படுவார். சிலருடைய செயற்பாடுகள் மற்ற மனிதர்களையும் பாவம் செய்யத் தூண்டிவிட்டதாக அமைந்தால் அவ்வாறானவர்கள் நிலமை அந்தோ பறிதாபம் தான். எனவே கல்வி மற்றும் நல்லொழக்கம் என்பன சிறு பராயம் முதலே திட்டமிட்டு கற்றுக் கொடக்கப்பட வேண்டும். அடுத்த பாகத்தில் எவ்வாறான கல்வித்திட்டங்களை நாம் எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம் என்பதை அலசுவோம்.