இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் 2012 ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது வழங்கல் போட்டிகளக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும் மொழிகளிலும் இடம்பெறவுள்ள இப் போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இப் போட்டிகளில் மாற்றுத்திறனுடையவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.
தமிழ் மொழியிலான போட்டிகளுக்கு அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், நாட்டார் பாடல்கள் (தனியாள், ஆண்கள், பெண்கள்) கிராமிய நடனம், புத்தாக்க நடனம், குழு (பெண்கள், ஆண்கள்) போன்றனவும்
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான பொதுப் போட்டிகள் வரிசையில் பரத நாட்டியம், கதகளி, (தனியாள், பெண்கள், ஆண்கள்) மௌன நாடகம், சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை, சித்திரம், புகைப்படம், சிற்பங்கள்,
தேசிய இளைஞர் குறுநாடகப் போட்டி என்பனவற்றிற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதில் ஈடுபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். அத்துடன் விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 25 ம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.