இலங்கை தொழில்நுட்ப சேவையின் II வகுப்பு ''ஆ'' தொகுதியின்
பொறியியல் உதவியாளர் பதவிக்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த
போட்டிப் பரீட்சை - 2012
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்
களத்தில் இலங்கை தொழில்நுட்ப சேவையின் II வகுப்பு ''ஆ'' தொகுதியில்
பொறியியல் உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த
போட்டிப் பரீட்சைக்கு இந்த அறிவித்தலில் காணப்படும் தகைமைகளையுடைய
இலங்கைப் பிரசைகளிடமிருந்து கரையோரம் பேணல் மற்றும் கரையோர
மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் விண்ணப்
பங்கள் கோரப்படுகின்றது