இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை தெளிவூட்டும் வகையில் சுற்றுநிரூபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில், இந்த வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதி 16 வயது பூர்த்தியாகும் அனைவரும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது பிறந்த மாதத்திற்கு அமைவாக வெவ்வேறான கோவைகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பங்களை உறுதிப்படுத்தி உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஒக்டோபர் 31 ஆம் திகதி 16 வயது பூர்த்தியாகாத பரீட்சார்த்திகளுக்கு தபால் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுள்ளது