அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Wednesday, May 16, 2012

தேசிய எந்திரவியல் டிப்ளோமா (NDES) பாடநெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


தகவல்: அப்துல்லாஹ் -
தேசிய பயிலுனர்க் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் கட்டுநாயக்க எந்திர தொழிநுட்பவியல் நிறுவகத்தில் நடாத்தப்படும் தேசிய எந்திரவியல் டிப்ளோமா (NDES) பாடநெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகளுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் பின்வருமாறு:

01. க. பொ. தா (சா/த) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்: அதாவது ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும், பின்வரும் நான்கு பாடங்களிலும் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்: கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தாய்மொழி (சிங்களம் அல்லது தமிழ்)

02. க. பொ. த (உ/த) பரீட்சையில் கணிதப் பிரிவில் இணைந்த கணிதம், பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

03. வயது: 01.11.2012 அன்று 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்

பொறியியல் சார்பான சிறந்த டிப்ளோமா பாடநெறியாக கருதப்படும் இப்பாடநெறிக்கான விண்ணப்பங்கள் சிங்கள மொழி மூல வர்த்தமானியில் மட்டும் கோரப்பட்டுள்ளதால், எமது மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதை வாசகர் அப்துல்லாஹ் எமது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

எமது மாணவர்களின் நலன்கருதி இவ்விபரங்கள் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை பின்வரும் இணைப்பில்

பதிவிறக்கம் செய்ய முடியும். விண்ணப்ப முடிவுத் திகதி 31.05.2012 – வியாழக்கிழமை ஆகும்.

விண்ணப்பதாரிகள் மீளளிக்கப்படாத பரீட்சைக் கட்டணம் ரூபாய் 500/- ஐ மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலேனும் செலுத்தி, கட்டணச் சீட்டை (Pay in slip) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கட்டணம் செலுத்தும் போது பின்வரும் விபரங்களை தெளிவாக கட்டணச் சீட்டில் குறிப்பிட வேண்டும்.இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பதாரிகள், வின்னப்பத்துக்கான கட்டணத்தையும் சேர்த்து ரூபாய் 650/- செலுத்த வேண்டும்.

(i) கிளை குறியீடும் கணக்கு இலக்கமும் (Branch Code and Account No): 276-1-001-2-4535909
(ii) பெறுனர் விபரம்: தேசிய பயிலுனர்க் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, சேரும் கணக்கு இலக்கம் 276-1-001-2-4535909, மக்கள் வங்கி, கட்டுநாயக (Credit Instruction: To the credit of National Apprentice & Industrial Training Authority collection account No. 276-1-001-2-4535909 at People’s Bank, Katunayake.)
(iii) விண்ணப்பதாரியின் பெயரும் முகவரியும் (Name & the Address of the Applicant)

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத்தபாலில் பின்வரும் முகவரிக்கு 31.05.2012 அன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கத்தக்கவாறு அனுப்பப்படல் வேண்டும்:

Director / Principal,

Institute of Engineering Technology,

Temple Road,

Katunayake.

கடித உரையின் இடதுபக்க மேல் மூலையில் “Recruitment of Special Apprentices – 2012” என்று குறிப்பிட வேண்டும். சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான பாடநெறி மற்றும் விண்ணப்பதாரிகளுக்கான விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்