
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் – மே மாதம்- 27ஆம் திகதி ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் முதற்கட்டமாக பத்தாயிரம் மாணவர்கள்சேர்த்துக்கொள்ளப் படவுள்ளனர்.
இப்பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப் பட்டிருக்கும் மாணவர்கள் மே மாதம் 27 ஆம் திகதி மாலை 6.00 மணிக் குள் தங்களது பயிற்சி நிலையங்களுக்கு வருகை தரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.