இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மத் பட்டங்களை வழங்கி வைத்தார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த ஆறு பட்டமளிப்பு விழாக்களும் கொழும்பு நகரத்திலேயே நடத்தப்பட்டன. தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்ச்சி காரணமாக இம்முறை பட்டமளிப்பு விழா தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக பல்கலை கழக ஒலுவில் வளாகத்திலேயே இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.
பிரயோக விஞ்ஞான பிரிவில் 58 மாணவர்களும் , கலை கலாச்சார பிரிவில் 237 மாணவர்களும் , இஸ்லாமிய கற்கை பிரிவில் 70 மாணவர்களும் , வர்த்தக முகாமைத்துவ பிரிவிலிருந்து 59 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.
வைபவத்தில் உயர் கல்வி அமைச்சர் எஸ்திசாநாயக்க பிரதம அதிதியாகக்.பி. கலந்து சிறப்பித்தார். சிறப்புப் பேச்சாளராக கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுணில் ஜயந்த நவரத்ன கலந்து சிறப்புரை ஆற்றினார்.
இன்றைய நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலை கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.எ.கதருக்கு கௌரவ இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விஞ்ஞான பிரிவில் 2006/2007 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர் ( Best Student) கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ராப் நினைவுப்பதக்கம் சாகுல்ஹமீது சாஜிதா என்ற மாணவிக்கும், இரசாயன பிரிவில் 2005/2006 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர் ( Best Student) பேராசிரியர் சுல்தான் பாவா நினைவுப்பதக்கம் செயனுலாப்டீன் பாத்திமா பதானா என்ற மாணவிக்கும், இஸ்லாமிய கற்கை பிரிவில் 2005/2006 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர் ( Best Student) எம்.எச்.அப்துல்காதர் நினைவுப்பதக்கம் அப்துல்ரஹீம் பாத்திமா சஹீகா பார்வின் என்ற மாணவிக்கும், முகாமைத்துவ பிரிவிலிருந்து (Best in Management) 2005/2006 ம் கல்வி வருடத்துக்கான சிறந்த மாணவர் அல்ஹாஜ் எ.எல்.இப்ராலேப்பே நினைவுப்பதக்கம் அபுபாக்கர் இல்முடீன் என்ற மாணவருக்கும், அல்ஹாஜ் எ.எம்.இஸ்மாயில் நினைவுப்பதக்கம் (Best in Commerce) மவ்ஜூத் மொஹம்மத் சிராஜ் என்ற மாணவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பிற்பகல் 4.30 தொடக்கம் 8.30 வரைக்கும் தென்கிழக்கு பல்கலை கழகத்தில் 2000ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரைக்கும் விளையாட்டுத்துறையில் அக்கரை செலுத்தியவர்கள் மற்றும் சிறந்த அடைவு மட்டங்களை பெற்றுக் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் வர்ண இரவு (கலர் நைட்) நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு 151 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அதே வேளை நாளை (2012.05.20)வெளிவாரி மாணவர்கள் 270 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது இதில் பிரதம அதிதியாக பிரதி உயர் கல்வி அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க கலந்து கொள்ளவுள்ளார் சிறப்பு பேச்சாளராக நெதர்லாந்தை சேர்ந்த கிளிஞ்சன்டெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்ஜ் பிரஜ் கலந்து கொள்ளவுள்ளார். .
thanks toயாழ் முஸ்லிம்