
புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பாடசாலைகளிலேயே கடமையாற்ற வேண்டும் என்றும் இல்லையேல் நியமனங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்டிருக்கும் தொழில்நுட்பப் பட்டதாரிகள் கடமையாற்ற வேண்டிய பாடசாலையைக் கல்வியமைச்சே முழுமையா கத் தீர்மானிக்கிறதே தவிர இதில் பட்டதாரிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம் வழங்கப்பட வில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
1000 தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் ஆசிரியர் நியமனம் வழங்குவது இதுவே முதற் தடவையாகு மெனவும் அமைச்சர் தெரிவித்தார்.