க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் உயர்சித்தி அடைந்த மாணவர்கள், தேசிய பாடசாலை ஒன்றிலிருந்து, மற்றுமொருதேசிய பாடசாலைக்கு உயர் கல்விக்காக சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில், கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கை தற்காகலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களும் பெற்றோர்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியமையால் தற்காகில்கமாக இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கல்விகளின் பிரபல்யம், தரம் என்பவற்றை கருத்தில் கொண்டு, கல்வி பொது தராதர உயர் தர கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களை பெற்றோர் இடம்மாற்றுவது வழக்கம்.
எனினும் ஒரு தேசிய பாடசாலையிலிருந்து மற்றுமொரு தேசிய பாடசாலைக்கு இவர்களை மாற்றுவது உகந்ததல்ல என கூறியுள்ள பிரதி அமைச்சர், அதிக பெறுபேறுகளை பெற்ற்க்கொள்ளும் மாணவர்களை தமது பாடசாலைகளில் உயர் தரத்திற்காக இணைத்து கொள்ள அதிபர்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.