தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் ஒன்றை விரைவில் அமைக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விஞ்ஞான பீடத்தில் கணணி, புள்ளிவிபரவியல், பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், உயர் கல்விக்காக நாட்டம் கொண்டவர்களின் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக MBA கற்கை நெறியை ஆரம்பித்து மிகவும் சிறந்த முறையில் இயங்கி வருவதாகவும்தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இப்பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்கு குவைத் அரசாங்கம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீயுள்ளதுடன் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதத்கது.