காத்தான்குடி பிரதேச கல்வியை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு திட்ட மிட்டு வழி நடாத்துவதற்காக கல்வித்துறை சார்ந்தவர்களைக் கொண்ட உயர் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு (19.05.2012) சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கலாச்சார மண்டபத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் நடைபெற்றது.
சுதந்திரமாகச் செயற்படும் இச்சபையின் உறுப்பினர்களையும், பணிகளையும் அறிமுகப்படுத்தி, அனைவரது ஒத்துழைப்பையும் பெரும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார, காணி,காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமல வீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மாகாணக் கல்விஅமைச்சின் பதில் செயலாளர் அல்ஹாஜ்.எம்.டீ.எம். நிசாம், வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். யு.எல்.எம். ஜெயினுதீன், பிரதேச கல்விப் பணிப்பாளர்சுபைர், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கிழக்கு பிராந்திய காரியாலய செயலாளர் பீ.ரீ.எம். பாறூக் மற்றும் பாடசாலை அதிபர்கள் உட்பட ஆசிரிய, ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சுதந்திரமாகச் செயற்படும் இச்சபையின் உறுப்பினர்களையும், பணிகளையும் கிழக்கு மாகாண கல்வி,கலாச்சார, காணி,காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமல வீர திஸாநாயக்க, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் கௌரவ ஹிஸ்புழ்ழாஹ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
இக் கல்விச் சபையின் தலைவராக காத்தான்குடியின் முன்னாள் கல்வி அதிகாரி எம்.ஐ.சின்னலெவ்வை, செயலாளராக முன்னாள் அதிபர் எம்.எச்.ஏ.இஸ்மாயில், சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், மௌலவி அலியார் றியாதி, எம்.ஐ.எம்.நவாஸ். காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எம்.எம்.சுபைர், டாக்டர் எம்.டி.எம்.மாஹிர் உட்பட 10பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.