உலக மனங்களின் ஒற்றுமைக்கும் நம்பிக்கைக்குமுரிய ஒரு அடையாளமே ஐக்கிய நாடுகள் சபை (United Nations ) உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார, சமூக நிலையில் ஒத்துழைப்பு இவற்றிக்காக உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, 1945 , ஒக்டோபர் 24 , முதல் செயல்படத் தொடங்கியது.
ஐக்கிய நாடுகள் சபை என்னும் பெயர் அமெரிக்க அதிபர் பிராங்லின் டி. ரூஸ்வெல்ட்டின் சிந்தனையில் உருவானது. ஐ. நா. தனது 18 சுதந்திர சிறப்புக் கழகங்கள், 14 பெரிய திட்டங்கள் மற்றும் நிதியமைப்பு வழி மனித குலத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒக்டோபர் 24 ஐ. நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஐ. நா சபையின் அலுவலக மொழிகள்: சீனம், அரபி,ஆங்கிலம், பிரெஞ்சு , ரஷ்யன் மற்றும் ஸ்பொனிஷ் . இதன் சின்னம் இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டமாகும். அமைதியை விரும்பும் எந்த நாடும் இதன் உறுப்பினராக முடியும். பாதுகாப்பு சபையின் சிபாரிசின்படி, பொதுக்குழு புதிய உறுப்பினர்களை அனுமதிக்கிறது. தற்போதைய நிலையில் ஐ. நா.உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 192 தானே தபால் தலைகள் வெளியிடும் தபால் நிலையம் ஐ. நா.விற்குண்டு.
தலைமையகம் - NEW YORK CITY , NEW YORK , USA
ஐ. நா.சபை ஐந்து உள்ளமைப்புக்களைக் கொண்டது. அவை: பொதுச்சபை , பாதுகாப்புச்சபை, பொருளாதார சமூக சபை , பொருப்பாண்மைக்குழு பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் செயலகம் என்பன.
பொதுச்சபை (General Assembly )
ஐ. நா.உறுப்பு நாடுகள் அனைத்தின் பிரதி நிதிகளையும் கொண்டது. உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஐந்து பிரதிநிதிகளை இச்சபைக்கு அனுப்பி வருகின்றன என்றாலும் ஒரு வாக்குரிமையே உண்டு. முக்கிய பிரச்சனைகளில் தீர்மானம் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். இச்சபை குறைந்தது வருடத்திற்கு ஒரு முறை கூடும்.
ஐ. நா.வின் ஆண்டு வரவு செலவு திட்டத்தைக் கணக்கிடுவது: பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பது : பாதுகாப்புச்சபையோடு சேர்ந்து பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இதன் பணிகளில் சில.
பாதுகாப்புச் சபை ( Security Council )
இது 15 அங்கத்தினர்களைக் கொண்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு உண்டு. ஐந்து நிரந்திர உறுப்பினர்களும்: இரண்டு ஆண்டுகளுக்கான பத்து தற்காலிக உறுப்பினர்களும் அடங்கியது. ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் எந்த தீர்மானத்தையும் நிராகரிக்கும் அதிகாரத்தைப் (Veto Power) பெற்றுள்ளனர்.
நிரந்தர உறுப்பினர்கள் : சீனா , பிரான்ஸ் , ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா
NOTE :
ஐ. நா. பொதுச்செயலாளரான முதல் ஆசிரியர் யு.தாண்ட ( மியான்மார்)
ஐ. நா. பொதுச்செயலாளர் பதவி வகித்தபின் ஒரு நாட்டின் அதிபரானவர்: குர்ட்வான் ஹைம் பெரிஸ் (ஆஸ்திரியா)
ஐ. நா.பாத்துச் செயலாளராக பதவிவகித்தபின் ஒரு நாட்டின் பிரதமரானார்: ஜாவியர் பெரஸ் டி. கொயர் (பெரு)
ஐ. நா. பொதுச் செயலர் பதவியை இராஜினாமா செய்த முதல் நபர்: டிரைக்வோ (நோர்வே)
நோபல் பரிசு பெற்ற ஐ. நா. பொதுச்செயலாளர்கள்: டாக் ஹாமர் ஸ்கோல்ட் (1961) கோபி அனான் (2001 )
ஐ. நா. பொதுச் செயலரான முதல் ஐரோப்பியர் : டிரைக்வோ (நோர்வே)
ஐ. நா.பொதுச் செயலாளரான முதல் ஆபிரிக்கர் : பொட்ரோஜ் பொட்ரோல் காலி (எகிப்து)
பொதுச் செயலராக பதவியிலிருக்கும் போதே காலமான ஒரே பொதுச்செயலர்: டாக் ஹாமர் ஸ்கோல்ட் (சுவீடன் )
ஐ. நா.- பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் : டோக்கியோ (யப்பான்)
நியூயோர்க்கிலுள்ள ஐ. நா. நூலகத்தின் பெயர் : டாக் ஹாமர் ஸ்கோல்ட்
நியூயோர்க்கு வெளியே தலையகம் கொண்ட ஒரேயொரு ஐ. நா அமைப்பு: சர்வதேச நீதிமன்றம்
ஐ. நா விலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் நாடு தாய்வான் (1971 )