மார்க்ககல்வி பயின்றவர்களும்... மத்திய கிழக்கில் பணி புரியலாம்!.
காத்தான்குடி – 1 கபுறடி வீதியில் இயங்கிவரும் College of Architectural Engineering Technology நிறுவனத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட மேற்படி கருத்தரங்கு நேற்று 10.02.2012 வெள்ளிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு ஊர்களிலுமிருந்து பெரும்பாலான மௌலவிமார்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு அறபு மத்ரசாக்களிலும் மௌலவிப் பட்டம் பெற்று சொந்தமான தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்வதில் சிரமப்படும், மௌலவித் தகைமைக்கு பள்ளிவாயல் ஒன்றையே தொழிலுக்காக நம்பியிராமல் நவீன தொழிநுட்ப உலகுடன் போட்டியிட்டு சவால்களை எதிர்கொண்டு தமது திறமைக்கேற்ப கௌரவமான தொழிலொன்றைப் பெற்றுக் கொள்ளும் வகையில் மௌலவிமார்களை வழிகாட்டும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தரங்கு நாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து பல்வேறு அனுபவங்களைப் பெற்ற தற்போது இலங்கையில் கடமையாற்றும் தேர்ச்சிபெற்ற உலமாக்களைக் கொண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கருத்தரங்கில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர், காத்தான்குடியைச்சேர்ந்த அறபு மத்ரசாக்களின் அதிபர்கள், வாந யஊயுனுனுநஅல நிறுவனத்தின் முiகாமைத்துவப் பணிப்பாளர், பாடநெறிகளுக்கான இணைப்பாளர், விரிவுரையாளர்கள், நிருவாக உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இக்கருத்தரங்கில் அறபு மொழித்தேர்ச்சியுடன் காணப்படும் எமது மௌலவிமார்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் உயர் சம்பளத்துடனான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும்; அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மௌலவிமார்கள்; மேலதிகமாக எத்தகைய தகைமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவுரையாளர்களினால் வழிகாட்டல்களும் ஆலோசனைளகளும் வழங்கப்பட்டன.
College of Architectural Engineering Technology நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அவர்களினால் வெளிநாடுகளில்; எமது மௌலவிமார்களுக்கு காணப்படும் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் இவ் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கான மேலதிக தகைமைகளைப்; பூர்த்தி செய்து கொள்வதற்காக நிறுவனத்தினால் விNஷடமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறிகள் தொடர்பாகவும் பாடநெறி இணைப்பாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.
இப்பாடநெறிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.