கற்றுக்கொண்ட பாடங்களும்.. படிப்பினைகளும்.
24/02/2012 அன்று
கல்வி அமைச்சரால்
தேசிய பாடசாலையாக
தரம் உயர்த்தப்பட்ட
மீரா பாலிகா
மகா வித்தியாலய
பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது.இந்நிகழ்வில்
பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் உட்பட அணைத்து பிரமுகர்களும்
கலந்து கொண்டு
சிறப்பித்தது அறிந்ததே.
இந்நிகழ்வின்போது 2012யில் கல்வியில்
சாதனை புரிந்த
அணைத்து மாணவ
மாணவிகளும் இவர்களை உருவாக்கிய ஆசியர்களும் கௌரவிக்கப்பட்டமையும்
யாவரும் அறிந்ததே.
இதன்பின்னர் அண்மையில்
ஆரம்பம் செய்யப்பட்ட
கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இஸ்லாமிய உடையணிந்த மாணவிகளது
கூடைப்பந்தாட்ட கண்காட்சியும் கட்டுக்கோப்புடன்
இஸ்லாமிய விழுமியங்களுக்கு
அமைவாக நடை
பெற்றமையும் காணக்கூடியதாக இருந்தது.
உண்மையில் வட-கிழக்கு
மாகாணங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இப்படியான தொரு
நிகழ்வு இப்பாடசாலையில்தான் முதன் முதலில் நிகழ்ந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இப்பாடசாலையே ,இலங்கையில் முதன்முதலாக
கலாச்சார உடையான
பர்தாவை அறிமுகம்
செய்தது.இது
ஒவ்வொரு முஸ்லிமும்
பெருமைப்படவேண்டிய விடயமாகும்.
ஆரம்பத்தில் இதனை மிகமோசமாக
விமர்சித்தவர்கள் கூட இத்தடவை தங்களது பிள்ளையை
இவ்வணியில் இடம்பெற வைத்து பெருமைப்பட்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
தூர இருந்து பார்க்கும்போது
அவர்களது ஆடையின்
நேர்த்தி, பார்வையாளர்காக
இருந்த பெற்றோர்களாலேயே
அவர்களை இனம்பிரித்து
காணமுடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.