அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Monday, February 13, 2012

2012 இல் உலகம் அழியுமா..?

அல்குர்ஆன், பைபிள் ,தோரா போன்ற வேதங்கள் எல்லாம் கூறுவது என்ன?
முஹம்மத் ஜான்ஸின் 
2012 ஆம் ஆண்டு உலகம் அழியப் போவதாக சில பத்திரிகைகள் அண்மைக்காலமாக எழுதி வருகின்றன. அவ்வாறு உலகம் அழியுமா என்பதை சற்று அலசுவோம். அல்குர்ஆன், பைபிள் ,தோரா போன்ற வேதங்கள் எல்லாம் இந்த உலகம் என்றாவது ஒரு நாள் அழிக்கப் படும் என்ற இறைவனின் அறிவிப்பை எடுத்துக் கூறுகின்றன. 

உலக அழிவு என்பது வேகமான காற்று பாரிய சத்தம் மற்றும் அவற்றினால் உண்டாகக் கூடிய பாரிய அதிர்வுகளினால் ஏற்படும் என்பது தான் மேற்சொன்ன வேதங்களில் கூறப்பட்டுள்ள விடயமாகும். எத்தாளம் எனப்படும் சூர் ஊதப்படும் எனவும் அதையடுத்து உலகிலுள்ள மலைகளெல்லாம் பஞ்சு பஞ்சாகி பறக்கும் எனவும் உலகிலுள்ள சடப் பொருட்கள் எல்லாம் தூள் தூளாகிவிடும் என்பது தான் அல் குர்ஆன் நமக்கு எடுத்துக் கூறும் விடயமாகவுள்ளது. மேலும் அல்குர்ஆன் உலக அழிவு நாள் பற்றி மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தருகிறது.

அல்குர்ஆனில் அத்தியாயம் - 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) என்ற ஸுராவில் உலகம் அழியும் நாளைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

82:1 வானம் பிளந்து விடும்போது

82:2 நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

82:3 கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

அத்தியாயம் - 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) என்ற ஸுராவில் உலகம் அழியும் நாளைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

81:1 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

81:2 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

81:3 மலைகள் பெயர்க்கப்படும் போது-

81:4 சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

81:5 காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

81:6 கடல்கள் தீ மூட்டப்படும்போது-

81:7 உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

81:8 உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

அத்தியாயம் - 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) என்ற ஸுராவில் உலகம் அழியும் நாளைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

99:1 பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

99:2 இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

99:3 ''அதற்கு என்ன நேர்ந்தது?'' என்று மனிதன் கேட்கும் போது-

99:4 அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

99:5 (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.

அத்தியாயம் - 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) என்ற ஸுராவில் உலகம் அழியும் நாளைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

101:1 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

101:2 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

101:3 திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

101:4 அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

101:5 மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். 

இவ்வாறெல்லாம் உலகம் அழிக்கப்படும் போது நிகழும் என்பதாக இறைவன் கூறுகின்றான். மேலும் இவ்வாறாக உலகம் அழிக்கப்படுவதற்கு முன்பாக நிகழக் கூடிய சில விடயங்களில் ஒன்றாக பெரும் புகை மூட்டம் உலகில் பெரும்பாலான பிரதேசங்களை சூழ்ந்து கொள்ளும் என்றும் அது வேதனை தரக் கூடியமாக இருக்கும் என்றும் இறைவன் கூறுகின்றான்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆதிவாசிகளான மாயன் இனத்தவர்கள் தமது கலண்டரை 2012 டிசம்பர் 21ஆம் திகதி வரை எழுதி வைத்திருப்பதனால் அந்நாளில் உலகம் அழியும் என்பதாக சிலர் கூறுகின்றனர். உண்மையில் மாயன் இனத்தவர் வாழ்ந்த காலம் வானசாஸ்திரவியலில் உலகம் உச்சத்தை தொட்ட காலமாக இருக்கின்றது. ஆனால் உலகம் அழிவதற்கு முன்னர் பல்வேறு நிகழ்ச்pகள் நடைபெற வேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானதாக இமாம் மஹ்தி வெளிவரவேண்டும். அவரைத் தொடர்ந்து தஜ்ஜால் வெளிவருவான். அதனைத் தொடர்ந்து ஈஸா (அலை) பூமிக்கு இறங்குவார். இமாம் மஹ்தியினதும் ஈஸா (அலை) அவர்களினதும் ஆட்சியின் கீழ் உலகம் சில காலங்கள் இருக்கும். 

எனவே 2012இல் உலகம் அழியுமா என்றால் முழுமையாக அழியாது என்றே கூற முடியும். உலகத்தில் இன்று அநீதி தiலிவிரித்தாடுகின்றது. பொய்யர்கள் அறியாயக்காரர்கள் தகுதியற்றவர்களிடம் தலைமைத்துவம் உள்ளது. இக்காலத்தை அடுத்தே மஹ்தி வெளிவரக் கூடிய நிகழ்வுகள் நடக்கும். ஆனால் 2012 இல் உலகில் சில அழிவுகள் ஏற்படலாம். மஹ்தியின் வருகைக்கு முன்னர் இரண்டு பெரும் பூமியதிர்ச்சிகள் ஏற்படும்.

இதனால் பேரழிவு ஏற்படும். பல கோடி மக்கள் உயிரிழப்பார்கள். பெரும் பொருட் சேதங்கள் ஏறபடும். உலகில் அவ்வாறு ஏற்படக் கூடிய பூமியதிர்வு கிழக்கில் ஆசியா மற்றும் அவுஸ்திரேலிய கண்டங்களையும் மேற்கில் அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுடன் சில ஐரோப்பிய நாடுகளையும் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் அரேபிய தீபகற்பத்திலுள்ள சில நாடுகளும் இதனால் பாதிப்படைய வாய்ப்புண்டு. இந்த நிகழ்வினால் ஒரு வேளை முழு அமெரிக்க கண்டமும் அழிந்து போய்விடும் வாய்ப்பு உண்டு. சிலவேளை ஐரோப்பாவிலும் பேரழிவு உ;டாகக் கூடும். இதனாலேயே மாயன் கலண்டர் 2012 டிசம்பர் 21 உடன் முடிவடைகின்றதோ தெரியவில்லை.

மேலும் நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்தே கண்டங்கள் நகர்ந்தன. இன்றும் மேற்கு நோக்கி நகர்ந்துள்ள அமெரிக்க கண்டத்தை கிழக்கே இழுத்தால் அது ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க கண்டங்களுடன் பொருந்தக் கூடிய அமைப்பிலேயே உள்ளது.

அதே போன்று அவுஸ்திரேலிய கண்டத்தை மேல் நோக்கி நகர்த்தினால் அது தென்கீழ் ஆசியாவுடன் பொருந்தக் கூடியவாறு உள்ளது. 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் உண்டாகிய பூகம்பம் மற்றும் சுனாமியால் கூட சில நகர்வுகள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவில் கடற்பரப்பு தரையை நோக்கி முன்னேறியுள்ளது. நூஹ் நபி காலத்து வெள்ளப் பிரளயத்தால் அல்லது அதற்கு பிற்பட்ட பூமியதிர்ச்சியால் லெமூரியாக் கண்டமே கடலில் மூழ்கியதாக நில புவியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த லெமூரியக் கண்டம் இடம் பெயர்ந்ததாலேயே இந்தியாவிலிருந்து இலங்கை நிரந்தரமாக பிரிந்ததுடன் ஆதமின் பாலமும் இழுபட்டுள்ளது.

அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுக வேலைகள் முடிவடைந்த நிலையில் கடலினுள் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் பாறை இந்த லெமூரியாக் கண்டத்தை சேர்ந்தது என்பது சில புவியியலாளர்களின் விவாதமாகும். யாழ்ப்பாணத்தின் வடமேல் கரையும் புத்தளம் மன்னார் போன்ற பிரதேசங்களின் கரைகளும் உப்புத் தன்மையுள்ள நிலமாக காணப்படுவதற்கு காரணம் யாழ்ப்பாணப் பகுதி கடலிலிருந்து மேல் தள்ளப்பட்டமையால் கடல் தண்ணீர் பின்வாங்கி அந்த நிலம் உவர்தன்மையை அடைந்துள்ளது.

1556ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் சீனாவைத்தாக்கிய பூகம்பத்தால் 850000 பேர் உயிரிழந்தனர். 1976 ஜுலை 28 அன்று சீனாவில் இடம்பெற்ற இன்னொரு பூகம்பத்தால் 650000 பேர் உயிரிழந்தனர். இவையே உலகத்தில் அறியப்பட்ட பெரும் பூகம்பங்களாக உள்ளன. இலங்கையில் 13ஆம் நூற்றாண்டில் பெரும் பூகம்பம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விடயம் மேலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படவேண்டியதாக உள்ளது. 2004 டிசம்பர் 26 அன்று இலங்கையை தாக்கிய சுனாமியால் மட்டும் 45000 பேர் கொல்லப்பட்டனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே நிகழவிருக்கின்ற மூன்று பெரும் பூகம்பங்களும் உலக நாடுகளின் தோற்றங்களையும் தரையமைப்பையும் மாற்றிவிடும். இலங்கையை இப்பூகம்பம் தாக்கினால் மீண்டும் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி கடலினுள் அமிழ்ந்து புதைந்து போன லெமூரியா மீண்டும் வெளியே தள்ளலாம். இதனால் இலங்கை இந்தியாவை நோக்கி நகரக் கூடும். ஆனால் இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு பூகம்பத்தின் பின் எத்தனை பேர் மிஞ்சுவார்கள் என்பதிலேயும் இதிலே நாமும் ஒருவரா என்பதிலேயே தங்கியுள்ளது.(நன்றி,யாழ்முஸ்லிம்)