காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் ஜாமியுழாபிரீன் வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலை ஒன்றும், பாத்திமா மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலை ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப பாடசாலை வலையமைப்புக்காக இடைநிலை பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் தேசிய வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வுருகின்றது. (முன்னர் 1000 பாடசாலை வேலைத்திட்டம் என அழைக்கப்பட்டது)
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் குறைந்த பட்சம் 2-3 இடைநிலை பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்.
இப்பாடசாலைகள் 6-13 வரையான வகுப்புக்களை கொண்டிருக்கும். இப்
பாடசாலைகள் கருப்பாடசாலைகள் (CORE SCHOOL) என அழைக்கப்படுகின்றன.இத்தேசிய வேலைத்திட்டத்தினுள் தெரிவு செய்;யப்படும் கருப்பாடசாலைகளில் தரம் 6 ற்கு கீழ்ப்பட்ட வகுப்புக்கள் காணப்படுமாயின் அவை படிப்படியாக இல்லாமல் செய்;யப்படும்.
அதே வேலை ஒவ்வொரு கருப்பாடசாலைக்கும் அருகிலுள்ள 3-5 எண்ணிக்கையிலான ஊட்டற் பாடசாலைகள் (FEEDING SCHOOL) இவ்வலையமைப்பில் அபிவிருத்தி செய்யப்படும்.
காத்தான்குடி கோட்டத்தில் நான்கு பாடசாலைகள் இத்திட்டத்தின் கீழ்
கருப்பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. காத்தான்குடி மத்திய கல்லூரி,அன்நாஸர் வித்தியாலயம், அல்-ஹிறா வித்தியாலயம், அல்-அமீன் வித்தியாலயம் என்பவையே அவையாகும்.
மேற் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு கருப்பாடசாலைக்கும் ஊட்டப்பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஊட்டப்பாடசாலைகளாக அஷ;ஷ{ஹதா வித்தியாலயம், பிர்தௌஸ் வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம், ஹைராத் வித்தியாலயம், ஹஸனாத் வித்தியாலயம் என்பனவும்,
அன்-நாஸர் வித்தியாலயத்திற்கான ஊட்டற் பாடசாலையாக ஹுசைனிய்யா வித்தியாலயம்,மஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலயம் என்பனவும்,
அல் ஹிறா வித்தியாலயத்திற்கான ஊட்டற் பாடசாலையாக நேற்று (18.02.2012) புதிதாகஆரம்பிக்கப்பட்டுள்ள ஜாமியுழ்ழாபிரின் வித்தியாலம் என்ற பாடசாலையும்,அல்-அமீன் வித்தியாலயத்தின் ஊட்டற் பாடசாலையாக நேற்று (18.02.2012) புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாத்திமா மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் என்ற பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் இரண்டு புதிய
பாடசாலைகள் தோற்றம் பெறுவதுடன் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில்,மொத்தமாக பாடசாலைகளின் எண்ணிக்கை 31ஆக அதிகரிக்கின்றது.

தகவல்- S.M.M. சுபைர்- காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் .