ஆகிய வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளால் இயங்குகின்றன. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அதற்கு மாற்று எரிபொருள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில், தாவரங்களில் ஏற்படும் ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் கார்களை இயக்குவது குறித்து இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதற்காக, செயற்கை இலை ஒன்று தயாரித்துள்ளனர். அதில் சூரிய ஒளி மூலம் ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் மின் சக்தியை உருவாக்கி கார்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழில் நுட்பம் இன்னும் 2 ஆண்டுகளில் உருவாக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து 5 ஆண்டுகளில் இக்கார் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதே தொழில்நுட்பத்தின் மூலம் கப்பல்கள் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். இந்த தகவலை ஆய்வு குழுவின் தலைவர் பேராசிரியர் ரிச்சர்டு காக்டெல் கூறியுள்ளார்.
இன்னும் 10 ஆண்டுகள் கழித்து உலகில் இந்த தொழில்நுட்பத்தின் மூலமே வாகனங்கள் இயங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.