அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே

பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK

INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017

Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette

Friday, March 30, 2012

3908 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தி!!!.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளில் 3 ஆயிரத்து 908 பேர் 9 பாடங்களில் "ஏ' தர சித்தியைப் பெற்றுள்ளதாதோடு 12 ஆயிரத்து 795 பேர் 9 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் புள்ளி விபரத் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் இம் முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலைப் பரீட்சார்த்திகளில் 60.8 வீதமானோர் உயர்கல்வியைத் தொடர்வதகு தகுதி பெற்றுள்ளனர்.

இது கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை 0.3 சதவீதம் அதிகமாகும்.

சாதாரண தரப் பரீட்சைக்கு 4 லட்சத்து 43 ஆயிரத்து 298 பேர் தோற்றினர். இவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 332 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகள். இவர்கள் தொடர்பான புள்ளி விவரங்களையே பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

9 பாடங்களிலும் "ஏ' தர சித்திபெற்ற 3 ஆயிரத்து 908 மாணவர்களில், மேல்மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளடங்குகின்றனர். அதேபோன்று 9 பாடங்களிலும் சித்தியடைய தவறிய 12 ஆயிரத்து 795 மாணவர்களில், ஊவா மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளடங்குகின்றனர்.

மேலும் கணித பாடத்தினைப் பொறுத்த வரையில் கடந்த 2010ம் ஆண்டு 60.38 சதவீதத்தினர் சித்தியடைந்த போதும் கடந்த ஆண்டு இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 55.33 சதவீதத்தினரே சித்தியடைந்துள்ளனர்.
ஆங்கில பாடத்தைப் பொறுத்த வரையில் 2010ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 42.36 சதவீதத்தினர் சித்தியடைந்தபோதும் 2011ம் ஆண்டு பரீட்சையில் 44.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. விஞ்ஞான பாடத்தைப் பொறுத்த வரையில் 2010ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 61.72 சதவீதத்தினர் சித்தியடைந்துள்ளனர். இது 2011 ம் ஆண்டு 62.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வரலாற்றுப் பாடத்தைப் பொறுத்த வரையில் 73.78 சதவீதத்தினர் 2010ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதும் கடந்த ஆண்டு 66.45 சதவீதமாக குறைவடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் உள்ளது.

3908 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தி!!!.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளில் 3 ஆயிரத்து 908 பேர் 9 பாடங்களில் "ஏ' தர சித்தியைப் பெற்றுள்ளதாதோடு 12 ஆயிரத்து 795 பேர் 9 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் புள்ளி விபரத் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

ISLAMIC LINKS

ISLAMIC LINKS

நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் தரம் II இற்கு சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2012

நீதி மன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவையின் நீதி மன்ற உரைப்
பெயர்ப்பாளர் சேவைக்குரிய II ஆம் தரத்திற்கு சிங்களம்ஃ தமிழ் அல்லது
சிங்களம்ஃ ஆங்கிலம் அல்லது தமிழ்ஃ ஆங்கிலம் உரைபெயர்ப்பாளர்களை
சேர்த்துக்கொள்வதற்காக கீழ்க்குறிப்பிடப்படும் தகைமைகளைக் கொண்டவர்
களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விபரம் 30-03-2012 வர்த்தகமானியில்.

அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம்

இலங்கை தொழில்நுட்ப சேவையின் II வகுப்பு ''ஆ'' தொகுதியின்
பொறியியல் உதவியாளர் பதவிக்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த
போட்டிப் பரீட்சை - 2012

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்
களத்தில் இலங்கை தொழில்நுட்ப சேவையின் II வகுப்பு ''ஆ'' தொகுதியில்
பொறியியல் உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த
போட்டிப் பரீட்சைக்கு இந்த அறிவித்தலில் காணப்படும் தகைமைகளையுடைய
இலங்கைப் பிரசைகளிடமிருந்து கரையோரம் பேணல் மற்றும் கரையோர
மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் விண்ணப்
பங்கள் கோரப்படுகின்றது

Thursday, March 29, 2012

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளது !

alt

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்
பரீட்சையின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் பரீட்சை முடிவுகளின் படி சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பிரிலுள்ள 80 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்து அகில இலங்கை ரீதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடத்தினை பெற்றள்ளது.

altகண்டி கல்வி வலயம்,76 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்து இரண்டாமிடத்தையும், கொழும்பு கல்வி வலயம் 75 சதவிதமான மாணவர்கள் சித்தியடைந்து மூன்றாமிடத்தையும் அகில இலங்கை ரீதியாக பெற்றுள்ளது.

மேற்படி   மட்டக்களப்பு மத்தி வலயம் , காத்தான்குடி, ஏறாவூர்,கோறளைப்பற்று மேற்கு,  கோட்டங்களை உள்ளடக்கி 2007ம் ஆண்டு உருவாக்கப்பட் டு தேசிய ரீதியாக பல சாதணைகளைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளது !

alt

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்
பரீட்சையின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் பரீட்சை முடிவுகளின் படி சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பிரிலுள்ள 80 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்து அகில இலங்கை ரீதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடத்தினை பெற்றள்ளது.

O/L இஸ்லாம் பாடத்தில் 2372 மாணவர்கள் சித்தியடையவில்லை - அதிர்ச்சித் தகவல்!!!

ஓ.எல். பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் சித்தியடையும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டுக்கான ஓ.எல். பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 89.94 சதவீதமான மாணவர்கள் மாத்திரமே இஸ்லாம் பாடத்தில் சித்தியடைந்துள்ளனர். 
இஸ்லாம் பாடத்திற்கு தேசிய ரீதியாக 23583 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.எனினும் 2372 பேர் இஸ்லாம் பாடத்தில் இம்முறை சித்தியடைவில்லை.

2010 ஆம் ஆண்டு 91.55 சதவீதத்தினரும், 2009 ஆம் ஆண்டு 93.27 சதவீதமானோரும் ஓ.எல். பரீட்சை இஸ்லாம் பாடத்தில் சித்தியடைந்துள்ளனர்.

அந்தவகையில் 2011 ஆம் ஆண்டு 89.94 சதவீதத்தினர் மாத்திரமே ஓ.எல். பரீட்சை இஸ்லாம் பாடத்தில் சித்தியடைந்துள்ளமையானது முஸ்லிம் மாணவர்களின் வீழ்ச்சி மட்டத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

O/L இஸ்லாம் பாடத்தில் 2372 மாணவர்கள் சித்தியடையவில்லை - அதிர்ச்சித் தகவல்!!!

ஓ.எல். பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் சித்தியடையும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You Tube TEACHERS-Respiration 3D Medical Animation

Human Anatomy - Lungs

Human Anatomy - Ear

Vaginal Childbirth (Birth) animation video

Human Anatomy - Arm

You Tube TEACHERS-Respiration 3D Medical Animation

Human Anatomy - Lungs

463 மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தம்

2011ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளில் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட சில மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த முறை பரீட்சைக்கு தோற்றிய 463 மாணவர்களின் பரீட்சை முடிவுகள் பல்வேறு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

463 மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தம்

2011ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளில் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட சில மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Wednesday, March 28, 2012

உலக கல்வியும், மார்க்க கல்வியும் : உங்கள் குழந்தைக்கு!

எஸ். சித்தீக் 
பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.
சாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான்.

தற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது. ஏழைகள் என்ன செய்வது? வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.

உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் (கட்டணம் மிக மிக குறைவு சில நூரு ரூபாய்கள் தான்).பாடம் எளிதாக இருக்கும்,பள்ளியில் கல்வி கற்கும் நேரமும் குறைவு. எனவே குழைந்தைக்கு அதிக சுமை இருக்காது, படிப்பை தவிர பிற நல்ல விஷயங்களில் (மார்க்க கல்வியை கற்க) கவனம் செலுத்த நேரம் இருக்கும். மீதமுள்ள நேரத்தில் மார்க்க கல்வியை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.

பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்க பெற்றோர்கள் ஆலிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைத்தும் தமிழில் வந்துவிட்டன, விளகத்திற்க்கு இஸ்லாமிய ஆடியோ வீடியோ உரைகளும் இலவசமாக அல்லது ரூ.20, ரூ.30-யில் கிடைக்கின்றன (இஸ்லாமிய ஆடியோ, வீடியோ உரைகள் இலவசமாக Download செய்ய பல தமிழ் இணையதளம் இருக்கிறது) வெரும் அரபியில் குர் ஆன் ஓத கற்றுகொடுப்பது மட்டும் அல்லாமல், குர் ஆனை தாய் மொழியில் (தமிழிலோ, உருதுவிலோ) சொல்லிகொடுங்கள், பெரும்பாலான ஹதீஸ் கிதாபுகள் (புஹாரி, முஸ்லீம்), தமிழில் கிடைக்கின்றன. அதையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

ஆண்கள் வெளி நாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள பெண்களை பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்க சொல்லுங்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். உலக கல்வியையும் ஒழுங்காக பிள்ளைகள் படிக்கின்றனரா என கண்காணிக்கலாம்.

உண்மையிலேயே அந்த குறிபிட்ட பள்ளிகள் இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றனவா?

சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம், ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(?) கொள்கையைச் சார்ந்ததாகும்.

எனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமிய கல்வி முழுக்க குர் ஆன் ஹதீஸ் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நபி வழி பின்பற்ற இந்த பள்ளி சரிவருமா?

இஸ்லாமிய கல்வி கற்க பள்ளிகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் தீய்மைகளும், நாமே போதிப்பதால் ஏற்படும் நன்மைகளும்

1. பண விரயம் : உலக கல்வியுடன் சேர்ந்த்து இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை. பெற்றோர்களை ஏமாற்ற மாணவர்களுக்கு சில துஆக்களை சொல்லிக்கொடுத்து, பெற்றோர்களிடன் சொல்லிகாட்டி இஸ்லாமிய கல்விபோதிப்பதாக சொல்கின்றன. நாமே நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பெரும் அளவில் பணம் மிச்சமாகும்.

2. பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடக்க : இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடப்பதில்லை என குற்றச்சாட்டு பெற்றோர்கள் சொல்கின்றனர். நாமே இஸ்லாமிய கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்தால், நம்பிள்ளைகள் நம் மூலம் இஸ்லாத்தை அறிந்துகொள்வதினால் நம்மீது அன்பும், பாசமும் வைத்து நம்மை மதித்து நடப்பார்கள். பெறோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு அதிகரிக்கும். பிற்காலத்தில் நம்பிள்ளைகள் நல்ல நிலைக்குவந்தால், இதற்க்கு நம் பெற்றோர்கள்தான் காரணம் என எண்ணி வயதான காலத்தில் நம்மை சிறந்த முறையில் பராமரிப்பார்கள் (இன்ஷா அல்லாஹ்). இல்லையேல் நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என சொல்லி ஆசிரியரை மதிக்கும் அளவிற்க்கு கூட பிள்ளைகள் பெற்றோரை மதிக்காத நிலை ஏறபட்டு விடலாம்.

குடும்பமே தீய விஷயங்களில் இருந்து விலகி இருக்கலாம் : நாமே பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிப்பதால் டிவி-போன்ற தீமையான விஷயத்தில் இருந்து நாமும் நம் பிள்ளைகளும் விலகி இருக்கலாம் (இன்ஷா அல்லாஹ்). நல்ல விஷயத்தில் நேரத்தை செலவளிப்பதால் வீட்டில் சண்டைபோட நமக்கு நேரம் இருக்காது, எனவே குடும்பத்தில் அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்.

பெற்றோர்களுடைய இஸ்லாமிய அறிவும் வளரும் : பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை போதிக்க நாம் இஸ்லாத்தை அறிந்துகொள்வது அவசியமாகும், இதனால் நமக்கும் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். நாமும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடந்துகொள்வோம், இஸ்லாமிய தெளிவு இருப்பதினால் கணவன் மனைவி பிரச்சனை ஓரளவிற்க்கு குறையும். இறப்பிற்க்கு பிறகு நம்முடைய வாழ்வும் சுவனத்தில் அமைய வாய்ப்பாகும் இன்ஷா அல்லாஹ்.

வீட்டில் இஸ்லாமிய கல்வி போதிக்க தடுக்கும் காரணிகள்.

1. மார்கத்தை சொல்ல ஆலீமாக இருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர், அப்படி கிடையாது, அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. உங்களுக்கு அரபி தெரியாவிட்டாலும், தற்போது தமிழிலேயே குர் ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. விளக்கத்திற்க்கு இஸ்லாமிய புத்தகங்களும், இஸ்லாமிய உரைகளும் கிடைக்கின்றன. இவைகளை முறையாக படித்து, பார்த்து வந்தாலே நீங்களும் ஆலீம் ஆகிவிடலாம்.

2. அடுத்து டிவி. தற்போது பெரும்பாலும் பெண்கள் டிவியிலேயே மூழ்கிவிடுகின்றனர். நேரம் அனைத்தையும் அதிலேயே செலவிடுகின்றனர், இதனால் பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. வீட்டில் பிரச்சனைகள் தான் அதிகரிகின்றது. டிவிபார்க்கும் நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், உங்களுடைய கணவனின் பணமும் மிச்சமாகும், அந்த பணத்தில் நீங்கள் விரும்பிய நகைகளை வாங்கி அணிந்துகொள்ளலாம்.

குறிப்பு : இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என பிரிவினை கிடையாது. மக்கள் விளங்கிக் கொள்வதற்காக அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.

உலக கல்வியும், மார்க்க கல்வியும் : உங்கள் குழந்தைக்கு!

எஸ். சித்தீக் 
பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.

மருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்காட்டும் கண்காட்சி ஆனது28-03-2012முதல் தொடர்சியாக 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை .

Med Scope 12(Video)
ஆரோக்கியமான எதிர் காலத்திற்காக நோய்களை எதிர்கொள்வோம் எனும் தொனிப் பொருளில் கிழக்கு பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் நடாத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி. 

மனித உயிர்களில் உலாவுகின்ற நோய்கள் அவை சம்பந்தமான விளக்கங்கள் ,அவற்றில் இருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது போன்ற விடயங்களை உண்மையான உடல் வடிவங்கள் , உடல் மாதிரிகளின் வடிவங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றினூடாக மாணவர்கள் மூன்று மொழிகளிலும் விளக்கமளிக்கவுள்ளனர்.

இங்கு மனித உடல் ஒவ்வொரு தொகுதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு மொத்தமாக 95 காட்சி கூடங்களில் காட்சிபடுத்தபடவுள்ளன. இவை தவிர இரத்த தான முகாம் , அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மெடிக்ஸ் அமைப்பினூடாக கண்காட்சி தொடர்பான சின்னங்களையும் பெறுவதற்கான இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்காட்டும் கண்காட்சி ஆனது பங்குனி 28௮ம் திகதி முதல் தொடர்சியாக 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை பல்கலைகழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்காட்டும் கண்காட்சி ஆனது28-03-2012முதல் தொடர்சியாக 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை .

Med Scope 12(Video)
ஆரோக்கியமான எதிர் காலத்திற்காக நோய்களை எதிர்கொள்வோம் எனும் தொனிப் பொருளில் கிழக்கு பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் நடாத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி. 

Tuesday, March 27, 2012

முஸ்லிம்களும் கல்வியும்- பாகம்-3

முஹம்மத் ஜான்ஸின்
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற முஸ்லிம்களின் கல்வி குறித்த உலக மாநாட்டில் கீழ்க்கண்டவாறு பரிந்துரைகள் செய்யப்பட்டன, அதாவது முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய கல்வியின் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டுமெனில், ‘மனித ஆத்ம சக்தி, அறிவாற்றல், பகுத்தறிவு, உணர்வுகள் மற்றும் நுண்ணறிவுகள் ஆகிய அனைத்தும் சமச்சீரான அளவில் அவனுடைய அல்லது அவளுமைடய ஆளுமைப் பண்பில் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.

அவனுக்கு அல்லது அவளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியானது அவர்களை ஆத்ம ரீதியாக மார்க்கத்துடன் இணைத்து வைப்பதாகவும், இன்னும் அல் குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய மாண்புகளை விரும்பி ஏற்கக் கூடிய மனப்பக்குவத்தையும், இன்னும் தன்னை இந்தப் பூமிக் கோளத்தின் கலீபாவாக – பிரதிநிதியாக இறைவன் அனுப்பி இருக்கின்ற நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாகவும் அவர்கள் தங்களது வாழ்வில் மலர வேண்டும்.

நம்முடைய குழந்தைகள் தலைமைத்துவத்திற்கான ஆளுமைப் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டுமே ஒழிய, ஏனைய இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர்களாக இருத்தல் கூடாது. தங்களது கல்வி, அறிவு, ஞானம், பண்புகள் மற்றும் நேர்மறையான செயல்பாடுகள் மூலம் அவர்கள் சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய ஒளி விளக்குகளாகப் பரிணமிக்க வேண்டும். இளைய சமுதாயத்தின் தன்மைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்றால், அவர்கள் திருமறைக் குர்ஆனை நேரடியாகக் கற்று விளங்கி, அதன் மூலம் தங்களது வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை அதன் ஒளி கொண்டு தீர்வு தேடிக் கொள்வதன் மூலம் அடையப் பெற முடியும் என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றார்கள்.

இத்தகைய தலைமைத்துவப் பண்புகளுக்கு உரித்தானவர்களாக நம்முடைய குழந்தைகளை மாற்றுவதற்குண்டான பயிற்சிக் கையேட்டை இன்னும் நம்முடைய சமுதாயம் தயாரிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார். மகிழ்ச்சிகரமான குடும்பம், அமைதியான, பாதுகாப்பான, அன்பான வாழ்க்கையை வழங்குவதுடன், இன்னும் நல்ல கல்வியை அவர்களுக்கு வழங்குவதும் பெற்றோர்கள் மீதுள்ள கடமையாக இருக்கின்றது.

எவரொருவர் குழந்தைகள் மீது இரக்கம் கொண்டவராக இல்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள். இன்னும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வழங்குகின்ற அறிவுரைகளில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமும், மற்றும் பண்பாடுகளும் தான். முஸ்லிம் குழந்தைகள் தங்களுக்கான இஸ்லாமிய விழுமியங்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்றார் உறவுகள், நண்பர்கள், மற்றும் சூழ்நிலைகளிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றன. இளமையில் கல்வி தான் மிகச் சிறந்தது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழிக்கேற்ப, இரும்பு பழுக்கக் காய்ச்சி இருக்கும் நிலையில் தான் அதனை விரும்பிய வகையில் வளைக்க முடியும். இதுவல்லாத நிலையில், முஸ்லிம் குழந்தைகள் விரும்பத்தகாத பழக்கங்களையும், மாற்றுப் பண்பாடுகளையும் பெற்றுக் கொண்டு, பெற்றோர்களுக்கும், முஸ்லிம் உம்மத்திற்குப் பிரச்னைக்குரியதாக மாறி விடுவதோடு, அந்தக் குழந்தை நல்லதொரு உம்மத்தாக மாறுவதும் கடினமாகி விடும்.

குழந்தைகளுக்குக் கல்வியை வழங்குவதன் கடமையில் முதல் நிலையில் உள்ளவர்கள் பெற்றோர்கள். குழந்தையின் ஆரம்பகால இளமைப் பருவத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற கல்வி அறிவு+ட்டல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கல்வி கற்றல் என்பது அதன் வாழ்வின் முதல் நாளிலிருந்து, அது மரணமடையும் வரைக்கும் தொடர்கின்றது. அதன் முதல் நடவடிக்கையாக ஒவ்வொரு இரவிலும் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளுடன் நிறைவேற்றுபவர்களாக பெற்றோர்கள் இருத்தல் வேண்டும்.

இஸ்லாமியச் சூழ்நிலைகளையும், இஸ்லாமிய பண்பாடுகளையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய கடமை பெற்றோர்களைச் சார்ந்தது. இஸ்லாத்திற்கு முரணானவற்றைப் பெற்றோர்கள் செய்து கொண்டு, பிள்ளைகள் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் வளர வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு. குழந்தைகளுக்கு அழகிய முன்மாதிரிகளாக முதலில் பெற்றோர்கள் தான் திகழ வேண்டும். பெற்றோர்களைப் பார்த்துத் தான் பிள்ளைகள் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றன, இன்னும் பெற்றோர்களது பழக்க வழக்கங்களை அடிப்படையாகவும் கொண்டு தான் அவை வளரவும் ஆரம்பிக்கின்றன.

குழந்தைகள் வளர வளர அதன் ஒழுக்க மேம்பாட்டில் பெற்றோர்கள் தவிர, இன்னும் ஆசிரியர்கள், சமூகத்தில் உள்ள மூத்தவர்கள், நண்பர்கள் ஆகியோர் மிகவும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தோதான பள்ளிக் கூடங்களைத் தேர்வு செய்தல் வேண்டும்.

இன்றைய நவீன உலகில் ஆடியோ, வீடியோ, டிஷ், வீடியோ கேம்ஸ், படங்கள், தொடர்கள், கார்ட்டூன்கள் போன்றவை, அதன் ஆளுமையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வல்லவைகளாக இருக்கின்றன, இன்னும் இஸ்லாமிய பண்பாட்டில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன என்பதால், பெற்றோர்கள் குழந்தைகளின் ஆளுமையில் இஸ்லாத்திற்கு முரணான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பது அவசியமாகும். இது ஒன்றும் இன்றைக்கு செய்து விட்டு நாளைக்கு விட்டு விடுகின்ற வேலையும் அல்ல, இன்னும் சமூகத்தில் ஒரு சிலரது கடமையுமல்ல. மாறாக, மொத்த சமூகமும் இது விஷயத்தில் தொடர் கவனத்தைச் செலுத்த வேண்டியதுள்ளது. அவ்வாறில்லா விட்டால், இன்றைய குழந்தைக் குற்றவாளிகள் அட்டவணையில் உங்களது குழந்தையும் இணைந்து விட வாய்ப்புள்ளது.

இஸ்லாமியக் கல்வியை நாம் ஏன் ஊட்ட வேண்டும் என்கிறோம் என்றால், இன்றைய நவீன நாகரீக உலகில் பள்ளிக் கூடங்கள் கூட தீவிரவாதப் பாசறைகளாக மேலைநாடுகளில் மாறி விட்டன, மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் துப்பாக்கி சகிதங்களுடன் பள்ளிக் கூடங்களுக்கு வருகின்றன, சக தோழர்களைச் சுட்டுக் கொன்று சந்தோஷமடைகின்றன, தாங்கள் பார்த்த படத்தைப் போலவே தாங்களும் ஹீரோக்களாக மாற முயற்சி செய்கின்றன, இத்தகைய இழிநிலைகள் முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது. அதுவன்றி மொத்த சமூகமும் இஸ்லாத்தினால் பயனடைய வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதின் நோக்கமாகும். இஸ்லாமிய அறிவூட்டலுக்குப் பின்னர் பள்ளிக் கூடங்களைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் கல்லூரிக்குள்ளும் அடியெடுத்து வைக்க வேண்டும்.

கல்வி அறிவைத் தேடுவதிலும், அதனை வளர்த்துக் கொள்வதிலும் முஸ்லிம் சமூகமும் இனியும் பொடுபோக்காக இருக்க முடியாது. அது முன்னணியில் இருந்தாக வேண்டும். இன்னும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும், வயது வித்தியாசமின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு துறைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள அவர்கள் விரைய வேண்டும். இணையத் தளங்கள் இன்றைக்கு கல்வி அறிவை மிக விரைவாகத் தரக் கூடிய சாதனமாக இருக்கின்றது. பள்ளிக்கூட வகுப்பறைகள், நூல் நிலையங்கள், மற்றும் இன்றைய உலகில் மனிதர்கள் அதிகம் வந்து போகக் கூடிய இடங்களில் கூட நூல்களும், இன்னும் அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
மேலைநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளை எத்தகைய பள்ளிக் கூடங்களில் சேர்ப்பது என்பது குறித்த தடுமாறுகின்றனர். எப்படிப்பட்ட பள்ளிக் கூடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சுதந்திரம் பெற்றோர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் தேர்வு செய்யும் பள்ளிக் கூடங்கள், கல்வியறிவை நல்ல முறையில் வழங்கக் கூடியதாகவும், இன்னும் ஒழுக்கமாண்புகளை விதைக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

-முற்றிற்று-
source-lankamuslim

முஸ்லிம்களும் கல்வியும்- பாகம்-3

முஹம்மத் ஜான்ஸின்
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற முஸ்லிம்களின் கல்வி குறித்த உலக மாநாட்டில் கீழ்க்கண்டவாறு பரிந்துரைகள் செய்யப்பட்டன, அதாவது முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய கல்வியின் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டுமெனில், ‘மனித ஆத்ம சக்தி, அறிவாற்றல், பகுத்தறிவு, உணர்வுகள் மற்றும் நுண்ணறிவுகள் ஆகிய அனைத்தும் சமச்சீரான அளவில் அவனுடைய அல்லது அவளுமைடய ஆளுமைப் பண்பில் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.

க.பொ.த சாதாரண தர விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

க.பொ.த சாதாரண தர விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
இவ் விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 21ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களின் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்திற்குச் சென்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

அதற்கான மாதிரி விண்ணப்பங்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஒரு பாடத்திற்கு மீள் திருத்தக் கட்டணமாக 150 ரூபா அறவிடப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே,புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தர விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

க.பொ.த சாதாரண தர விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

Monday, March 26, 2012

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஓர் எழுத்து ஒரு சொல் !
ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.
ஒரு எழுத்து சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.
ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்து சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும்

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஓர் எழுத்து ஒரு சொல் !

மயிர் கூச்செறிய வைக்கும் இந்த வீடியோவை பாருங்கள்;அல்லாஹ்வுக்கு நன்றி கூறுங்கள்!

எல்லாம் வல்ல இறைவனின் படைப்புகளை,அதன் நுண்ணிய அமைப்புகளை ,மிக கவனமான,அழகானவடிவமைப்புகளை பார்க்கும் போது,எல்லாம் வல்ல இறைவனை நிச்சயமாக புகழ வேண்டும்.சுப்ஹானல்லாஹ்

அளவற்ற இறைவன் மிகத்தூய்மையானவன்,பெருமைக்கு உரியவன்.

எதையும் படைக்காத,இருப்பதை குறையும் தவறுமாக செய்யும் நமக்கு என்ன புகழ் வேண்டிக்கிடக்கிறது. ???

இந்த ஒரு வீடியோ கிளிப்பை பாருங்கள் இறைவனை புகழுங்கள்.

ஆடம்பர செருப்பை பாராது ஆசைப்படுவதை விட காலில்லாதவனை பார்த்து இறைவனுக்கு நன்றிசொல்லுங்கள் .

பார்வை தெரியாதவரை பார்த்து கண்ணைத்தந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுங்கள்

மாளிகைகளையும் ,அலங்கார வாகனங்களையும் பார்த்து பெரு மூச்சு விடாமல் அழகிய வடிவில்அங்கவீனம் இன்றி உடலைத்தந்த

நம்மைப்படைத்த கருணை மிக்க அந்த அல்லாஹுத்தஆலாவுக்கு சுஜூது செய்யுங்கள்

'அளவற்ற அருளாளனே இருப்பதைக்கொண்டு எம்மை போதுமாக்கி ,உன்னை புகழும் மனதை எமக்குதருவாயாக ..'

ஆமீன்

மயிர் கூச்செறிய வைக்கும் இந்த வீடியோவை பாருங்கள்;அல்லாஹ்வுக்கு நன்றி கூறுங்கள்!

எல்லாம் வல்ல இறைவனின் படைப்புகளை,அதன் நுண்ணிய அமைப்புகளை ,மிக கவனமான,அழகானவடிவமைப்புகளை பார்க்கும் போது,எல்லாம் வல்ல இறைவனை நிச்சயமாக புகழ வேண்டும்.சுப்ஹானல்லாஹ்

வழிகாட்டல் ஆலோசனை ...

ஒருவர் செய்யத்தகுந்தது எது? செய்யத்தகாதது எது என்றும் எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் கூறப்படும் வார்த்தைகளே அறிவுரை கூறல் எனலாம்.

அதன் வழியே சரியான குறிக்கோளினை கண்டறிய உதவுதல் வழிகாட்டல் எனப்படுகின்றது. அதற்கும் அப்பால் ஆலோசனை கூறல் என்பததை ஒரு நபருக்கு மிகவும் பயனுள்ள.. வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் பெற்றுச் செயலாற்ற உதவுகின்ற சிகிச்சை செயன் முறையாகும். இவற்றை உள்ளடக்கியதான வழிகாட்டல் ஆலோசனை சேவை பற்றிய எண்ணக்கரு கடந்த பல தசாப்தங்களாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன.மாற்றங்களினை சிந்திக்கும் வழிகாட்டல் ஆலோசணை கூறலில் பல நவீன கருத்துக்கள் எழுவதற்கு பல காரணங்கள் உண்டு

1. சமூக, பொருளாதாரத் துறைகளில் நிகழ்ந்த மாற்றங்கள்.

2. விஞ்ஞானத்துறையின் வளர்ச்சி

3. கல்வி உளவியல் விருத்தி

4. தொடர்புசாதனங்களின் பயன்பாடு

வழிகாட்டல் என்பது தொடர்பான பழைய எண்ணக்கரு:

1. பிராங் பாசன் - வழிகாட்டலானது தொழிலைத் தேர்ந்தெடுக்கத் துணையாக அமைதல். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அமெரிக்காவில் மானுடவியல் பற்றிய நோக்கு வேகமாக விருத்தியடைந்து வந்தது. சிக்மண்ட் பிராய்டின் கருத்;துக்களால் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உளவியல் துறையில் புதிய அத்தியாயங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அமெரிக்க நாட்டவரான பிராங் பாசன் 1908ல் பொஸ்டன் நகரில் தொழிலுக்கு வழிகாட்டும் சேவை அமைப்பைத் தோற்றுவித்தார். இதுவே பிற்காலத்தில் வழிகாட்டற் சேவையின் ஆரம்பமானது.

இதன்விளைவாகச் சிறுவர்கள் உட்பட பலரும் பல்வேறு தொழில்களில் ஈடுபடவேண்டியதாயிற்று. இதனால் இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுப்பதும், கிடைத்த வேலைகளில் நிரந்தரமாகிக் கொள்வதும், பிரச்சினைக்குரியனவாக இருந்தன. இச்சந்தர்ப்பத்தில் பாசனின் கருத்து

அவையாவன:

• தனிநபர் பகுப்பாய்வு

• தொழிற் பகுப்பாய்வு

• மேற்கூறிய பகுப்பாய்வுகள் இரண்டினதும் ஒப்பீடு.

2. வழிகாட்டலானது கல்வி நடவடிக்கைகளுக்குத் துணையாக அமைதல். மாணவர்கள் பாடசாலையை புரிந்துகொள்வதற்கும், உரிய கல்வித்துறையை தேர்ந்தெடுப்பதற்கும் வழங்கப்படும் உதவி வழிகாட்டல் என ரூமன் கெலி (1914) தெரிவித்தார். ஹேபர்ட் கொசிஸ் கருத்துப்படி வழிகாட்டல் என்பது கல்வியே. கல்வி

செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யவும் உதவியளிப்பதே வழிகாட்டல் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய இரு எண்ணக்கருக்களும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் நிலவிய வழிகாட்ல் தொடர்பான எண்ணக்கருக்களாகும். 1920களின் பின்னர் வழிகாட்டல் பற்றிய எண்ணக்கரு மேலும் வளர்ச்சி அடைந்தது.

3. வழிகாட்டலானது புரிந்துகொள்ளலுக்கும் இசைவாக்கத்திற்கும் துணையாக அமைகின்றது.

வழிகாட்டல் ஆலோசனை ...

ஒருவர் செய்யத்தகுந்தது எது? செய்யத்தகாதது எது என்றும் எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் கூறப்படும் வார்த்தைகளே அறிவுரை கூறல் எனலாம்.

பல்கலைப் பேராசிரியர்களின் தரத்தினை மதிப்பிட விசேட குழு !

பல்கலைக்கழக பேராசிரியர்களின் கற்பித்தல் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் என்பனவற்றினை கண்காணித்து அவர்களினுடைய தரத்தினை மதிப்பீடு செய்வதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இதற்கான விசேட குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மால் ரஞ்ஜித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

இக்குழுவின் ஊடாக பல்கலைக்கழக பேராசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

அவர்களது நடவடிக்கையினை மதிப்பீடு செய்வதுடன் குறித்த விடயங்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட குழு ஆராயவுள்ளது. அத்துடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தமது தரத்தினை உயர்த்திக் கொள்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

பேராசிரியர்களின் தரம் அடங்கிய அறிக்கையினை விசேட குழுவினரிடம் இருந்து விரைவில் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கலைப் பேராசிரியர்களின் தரத்தினை மதிப்பிட விசேட குழு !

பல்கலைக்கழக பேராசிரியர்களின் கற்பித்தல் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் என்பனவற்றினை கண்காணித்து அவர்களினுடைய தரத்தினை மதிப்பீடு செய்வதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட

Sunday, March 25, 2012

நிர்வாக சேவை தரம் III ற்கு 173 பேர் புள்ளியடிப்படையில் தெரிவு

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii பதவிக்கான திறந்த போட்டி பரீட்சையில் முதல் கட்டத் தேர்வில் உயர் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 173 பேரில் 13 தமிழர்களும் 2 முஸ்லிம்களும் சித்தியடைந்துள்ளனர்.
போட்டிப் பரீட்சையின் உயர் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம்களின் விவரம் வருமாறு:

ஜி.ஆதவன், ஜே.எஸ்.சிந்தாமணி, வி.தர்சினி, ரி.கோமாதேவி, கே.அபிராமி, எம்.சுதாகர், எவ்.ஏ.எவ்.பர்ஸானா, பீ.சுரேஸ்குமார், கே.விக்னரூபன், எம்.பிரதீப், எஸ்.கிருஷ்ணவாணி, பி.கப்தீபன், ரி.பிரியந்தி, எஸ்.தனிக்குமார், ஏ.முஹம்மட் ரௌசாட் அகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் கட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 29 ஆம் திகதி மேலும் ஒரு பரீட்சை நடைபெறவுள்ளது. அதில் உயர்புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அதில் இருந்து தேவையானோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் 40 வீதத்தினரும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சேவையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பதில் கடமையில் உள்ளவர்களை உள்ளடக்கி நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் இருந்தும் 35 வீதத்தினரும் இலங்கை அதிபர் சேவையில் உள்ளவர்களிடையே நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் இருந்தும் மிகுதி 25 வீதத்தினரும் திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பது இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் 400 பேர் மட்டும் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். மூன்று நிலையிலும் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நேர்முகப் பரீட்சையும் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.