1ஆம், 8ஆம் திகதிகளில்
ஆட்பதிவுத் திணைக்களம் திறப்பு
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன்கருதி நாளை டிசம்பர் மாதம் 01 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் வரும் சனிக்கிழமை நாட்களில் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்குமென திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சில பாடசாலை அதிபர்கள் இதுவரையும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் வார நாட்களுக்கு மேலதிகமாக எதிர்வரும் சனிக்கிழமை நாட்களிலும் ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும்.
இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் 16 வயதை பூர்த்திசெய்த சகலருக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரையில் தேசிய அடையாள அட்டையைப் பெறாத அல்லது கிடைக்கப் பெற்ற அடையாள அட்டையில் ஏதேனும் தவறுகள் காணப்படுமாயின் 0112508022, 0112583122, 0112585043 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவைகளை பூர்த்திசெய்யுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.